12th of June 2013
சென்னை::சினிமாவை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு நடிகர்-நடிகையர் கட்டிப்பிடித்து நடித்தால் கிளுகிளுப்பாக இருக்கும். ஆனால் அதையே நடிகர்-நடிகைகளிடம் கேட்டால், கிளுகிளுப்பை தவிர்த்து அவர்களின் பர்பாமென்ஸைப்பற்றி பேசுவார்கள். அந்த வகையில அவர்களின் கண்ணோட்டம் வேறுமாதிரியாக இருக்கும். இந்த மனநிலையை சமீபத்தில் சமந்தாவும் வெளிப்படுத்தியுள்ளார். அதாவது, சித்தார்த்தும், இவரும் தீவிரமாக காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் செய்திகள் பரவி கிடக்கின்றன. ஆனால், தீயா வேலை செய்யனும் குமாரு படத்தில் ஜோடி சேர்ந்துள்ள சித்தார்த்-ஹன்சிகாவின் நெருக்கமான நடிப்பை மானாவாரியாக புகழ்ந்த தள்ளுகிறார் சமந்தா.
அந்த படத்தில் நானும் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருக்கிறேன். அப்போது, சித்தார்த்-ஹன்சிகா நடித்த சில ரொமான்ஸ் காட்சிகளைப் பார்த்தேன். ரொம்ப அற்புதமாக இருந்தது. சான்சே இல்லை, நானெல்லாம் இந்த அளவுக்கு எந்த நடிகருடனும் ரொமான்ஸ் பண்ணி நடிச்சதில்லை. அந்த வகையில, சித்தார்த்-ஹன்சிகாவின் நடிப்பைப்பார்தது ரொம்ப பொறாமையா இருக்கு. அவ்ளோ லவ் பீல் அவங்க முகத்துல, அதைப் பார்த்து ஒரு சக நடிகையாய் அசந்து போயிட்டேன் என்று தனது சினிமா வட்டார நண்பர்களிடம் தனது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகிறார் சமந்தா.

Comments
Post a Comment