Monday,10th of June 2013
சென்னை::நிமிர்ந்து நில்’ படத்தில் மீண்டும் இரு வேடங்களில் நடிக்கிறார் ஜெயம் ரவி.வாசன் விஷுவல் வென்சர்ஸ் தயாரிப்பில் சமுத்திரக்கனி இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் படம்.
சென்னை::நிமிர்ந்து நில்’ படத்தில் மீண்டும் இரு வேடங்களில் நடிக்கிறார் ஜெயம் ரவி.வாசன் விஷுவல் வென்சர்ஸ் தயாரிப்பில் சமுத்திரக்கனி இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் படம்.
ஜெயம் ரவி ஜோடியாக அமலா பால் நடிக்கிறார்.
முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கிறார். அவர் நேர்மையான சி.ஐ.டி அதிகாரியாக வருகிறார். சரத்தின் கம்பீரமும் தோரணையும் அந்த பாத்திரத்துக்கு வலு சேர்க்கும். கௌரவ தோற்றத்தில் வந்தாலும் அவர் வருகிற 25 நிமிடங்களும் அவர்தான் நாயகனாக தெரிவார்.
ஜெயம் ரவியின் இரு வேடங்களைப் பற்றி இயக்குனர் சமுத்திரகனி கூறுகையில், “
படிப்பில் கெட்டிகாரர் ஒருவர். பி.எஸ்.ஸி, எம்.எஸ்.ஸியில் நல்ல மதிப்பெண் பெற்று சாப்ட்வேர் நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்கிறார். நேர்மையாக இருக்க வேண்டும் , உண்மையை பேச வேண்டும் என்ற கொள்கை உடையவர்.
இன்னொருவர் நேற்று பற்றி வருத்தமில்லை. நாளை பற்றி கவலையில்லை. இன்று தான் முக்கியம். அன்றாட பொழுதுகள் ஆனந்தமாக கழியட்டும் என்கிற ஜாலி மனிதர். ஒருவர் நல்லவர் என்றால் இன்னொருவர் மிக நல்ல மனிதர்.
இவர்கள் இருவருக்கும் இடையில் மோதல் வரும்படி சூழல் கொண்டு போகிறது,” என்கிறார்.
தம்பிராமையா, சூரி, பஞ்சு சுப்பு, சித்ரா லட்சுமணன், பேராசிரியர் ஞானசம்பந்தன் ஆகியோரும் நடித்துள்ளனர். தயாரிப்பாளர் ஞானவேல் முக்கிய வேடமேற்றுள்ளார். சீதாலட்சுமி என்கிற குணச்சித்திர நடிகையும் அறிமுகமாகியுள்ளார்.
நிமிர்ந்து நில்” தமிழ், தெலுங்கு மொழிகளில் பல கோடி ரூபாய் செலவில் வேகமாக வளர்ந்து வருகிறது.
Comments
Post a Comment