கோச்சடையான் படத்துக்காக சுறா மீனுடன் சண்டையிடும் ரஜினி!!!

25th of June 2013
சென்னை::இந்தியத் திரையுலகின் முதல் மோஷன் கேப்சரிங் படமாக தயாராகி வரும் திரைப்படம் கோச்சடையான.
படத்தில் ரஜினிகாந்துக்கு இரட்டை வேடங்கள். அதாவது அப்பா, மகன் கேரக்டரில் வருகிறார். ரஜினியின் மகள் சௌந்தர்யா இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக முதன்முறையாக தீபிகா படுகோனே நடிக்கிறார். மேலும் படத்தில் ஆர். சரத்குமார், ஆதி, ஷோபனா, ருக்மணி விஜயகுமார், ஜாக்கி ஷெராப் மற்றும் நாசர் ஆகியோர் நடிக்கின்றனர்.

ரஜினி படங்கள் என்றால் எதிர்பார்ப்புக்கு சொல்லவே வேண்டாம். அந்த மாதிரி ஒரு எதிர்பார்ப்பு கோச்சடையான படத்துக்கு ஆரம்பத்திலிருந்தே இருந்து வருகிறது. தீபாவளிக்கு திரைக்கு வரும் கோச்சடையான் படம் குறித்து நாள்தோறும் புதிது புதிதான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் கோச்சடையான் குறித்து இப்போது பிரமிக்கும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது படத்தில் வரும் கிராபிக்ஸ் ரஜினி பயங்கரமான சுறா மீன் ஒன்றுடன் சண்டை போடுகிறாராம். இந்த காட்சியில் ரசிகர்கள் மிரள்வது உறுதி என்கிறது யூனிட்டிலிருந்து கசியும் தகவல்கள்.

Comments