இமான் இசையில் அனிருத்: மதன் கார்க்கி எழுதிய, பாட ல்!!!


Monday,10th of June 2013
சென்னை::கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கும் படத்தை ரவி தியாகராஜன் இயக்குகிறார். தெலுங்கில் ரிலீசான ‘ஆலா மொதலைந்தி’ படத்தின் ரீமேக்கான இதற்கு பெயரிடவில்லை. ரகுல் பிரீத்தி சிங் ஹீரோயின். இப்படத்துக்காக இமான் இசையில், மதன் கார்க்கி எழுதிய, ‘நீ என்ன அப்பா டக்கரா’ என்ற பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடினார். இதுபற்றி இமான் கூறும்போது, ‘கவுதம் கார்த்திக் படத்துக்காக பாட, அனிருத்திடம் கேட்டபோது, தயங்காமல் சம்மதித்தார். அவரது ஈடுபாடு பிரமிக்க வைத்தது’ என்றார். இசை அமைப்பாளர் இசையில் மற்ற இசைஅமைப்பாளர்கள் பாடி வருவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது..
 

Comments