சென்னை::ஆர்யா என்றாலே ஜாலி பேர்வழி என்றாகிவிட்டது. காரணம், அவர் நடிக்கும் படங்கள் ஜாலியான கதைகளாக இருப்பதோடு, உடன் நடிக்கும் நடிகைகளுடன் அவர் எந்நேரமும் ஜாலியாக கடலை போடுவதும் ஒரு காரணம். இதனால் அழுத்தமான கதைகளை அவரிடம் எந்த இயக்குனரும் சொல்வதில்லை. ஜாலியான கலகலப்பான கதைகள் என்றால் மட்டுமே ஆர்யாவை நாடுகிறார்கள். அவருக்கு இந்த மாதிரிதான் செட்டாகும் என்று அவர்களாகவே முடிவெடுத்து விட்டனர்.
ஆனால் ஆர்யாவுக்கு தொடர்ந்து சேட்டைத்தனமான கதைகளில் நடிப்பதில் ஆர்வம் குறைந்து வருகிறது. இதுவரை நடித்தது சரி, இனிமேல் கொஞ்சம் தரமான கதைகளாக நடிக்க ஆசைப்படுகிறேன் என்று சீரியசாக இயக்குனர்களிடம் கூறி வருகிறார். ஆனால், அவர் சீரியசாக சொல்வதை கேட்டு அதுகூட தமாஷ்தான் என்று நினைத்து விழுந்து விழுந்து சிரிக்கிறார்களாம் இயக்குனர்கள். இதுதான் ஆர்யாவுக்கு வேதனையாக உள்ளதாம்.
ஒரு நடிகன், ஜாலியாக சிரிச்சு பேசவே கூடாதா. அதையே அவனது கேரக்டர் என்று முடிவு செய்து விடுவதா? என்று வெறுப்படித்துக்கொண்டு திரிகிறர் ஆர்யா. அதோடு, தனது சினிமா நண்பர்களான விஷால், ஜீவா, ஜெயம் ரவி ஆகியோரிடமும் தனது நிலையை சீரியசாக சொல்லி வருகிறாராம். இதையடுத்து நிஜமாலுமே ஆர்யா சீரியசான கதைகளை தேடும் விவரத்தை டைரக்டர் வட்டாரங்களில் கூறி வருகின்றனர் மேற்படி நடிகர்கள்.

Comments
Post a Comment