Wednesday,5th of June 2013
சென்னை::சமந்தா பற்றி எதுவும் கேட்காதீர்கள் என்று எரிந்து விழுந்தார் சித்தார்த். பாய்ஸ் ஹீரோ சித்தார்த், நான் ஈ ஹீரோயின் சமந்தாவும் காதலிப்பதாக திரையுலகில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. சமந்தா, சித்தார்த் இருவரும் காளஹஸ்தி கோயிலுக்கு சென்று வழிபட்டதுடன் பரிகார பூஜைகள் செய்தனர். இதனால் இருவரும் காதலில் விழுந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. எங்கு சென்றாலும் சித்தார்த்திடம் சமந்தா பற்றியே மீடியா நபர்கள் கேட்கிறார்களாம். இதில் சித்தார்த் எரிச்சல் அடைந்துள்ளார்.
அவர் கூறும்போது, ‘ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கேட்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. அதேநேரம் சினிமாவுலக பத்திரிகைகள் ஒரு படத்தை பற்றி விமர்சிக்கலாம். நடிகரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க அவர்களுக்கு உரிமை கிடையாது. இன்னும் சொல்லப்போனால் ஒரு நடிகரின் தனிப்பட்ட வாழ்க்கையை வெளிப்படுத்துவதன் மூலம் அது எந்த வகையிலும் உலகத்துக்கு உதவப்போவதில்லை. பிள்ளைகள் விஷயத்தில் தலையிட பெற்றோருக்குதான் உரிமை உண்டு என்றார்.
Comments
Post a Comment