தலைவா' படப்பாடல் விவகாரம்: சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து, இயக்குநர் விஜய் புகார் மனு!

Wednesday,5th of June 2013
சென்னை::தலைவா படப்பாடல் விவகாரத்தில் நேற்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து, இயக்குநர் விஜய் புகார் மனு அளித்தார்.  அதன் விபரம் வருமாறு:- விஜய், அமலாபால் ஜோடியாக நடிக்கும் படம் `தலைவா'. ஏ.எல்.விஜய் டைரக்டு செய்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடக்கின்றன. பாடல்களை விழா நடத்தி வெளியிட ஏற்பாடுகள் நடக்கிறது.
 
இந்த நிலையில் `தலைவா' படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்று இன்டர்நெட்டில் பரவியுள்ளது. யாரோ இப்பாடலை திருடி இணையதளங்களில் வெளியிட்டு உள்ளனர். இதுகுறித்து டைரக்டர் ஏ.எல்.விஜய், தயாரிப்பாளர் சந்திர பிரகாஷ் ஜெயின் ஆகியோர் போலீஸ் கமிஷனரிடம் இன்று நேரில் புகார் செய்தனர்.
பின்னர் டைரக்டர் விஜய் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
'தலைவா' படத்தை ரூ.60 கோடி செலவில் எடுத்துள்ளோம். இதன் பாடல்களை விரைவில் வெளியிட இருந்தோம். இந்த நிலையில் `தலைவா' படத்தில் விஜய் பாடிய `வாங்கண்ணா வணக்கண்ணா' என்ற பாடல் ஆடியோ வெளியாகும் முன்பே இன்டர்நெட்டில் `யுடியுப்ைபிலும் பேஸ்புக்குளிலும் பரவியுள்ளன. இதை வெளியிட்டது யார் என்று தெரிவில்லை. எங்கள் உழைப்பு சுரண்டப்பட்டு உள்ளது. குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கமிஷனரிடம் புகார் செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
 
 

Comments