சயீப் அலிகான் ஜோடியாகிறார் தமன்னா!!!

17th of June 2013
சென்னை::தெலுங்கு மற்றும் தமிழில் நடிக்கும் தமன்னா, சாஜித் கான் இயக்கிய "ஹிம்மத்வாலா' ரீமேக்கில் அஜய்தேவ்கான் ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமானார். இதில் அவர் ஸ்ரீதேவி நடித்திருந்த வேடத்தை ஏற்றார். இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
 
இந்நிலையில், தமன்னாவை மீண்டும் தன் இயக்கத்தில் நடிக்க வைக்கிறார் சாஜித்கான். இதில் சயீப் அலிகான் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். மேலும் இஷா குப்தா, சோனல் சௌகான் நடிக்கின்றனர்.
 
இதைத்தவிர அக்ஷய்குமார் ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்கிறார் தமன்னா. தற்போது அவர் "சிறுத்தை' சிவா இயக்கத்தில் அஜித் ஜோடியாக பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்துக்குப் பின் பாலிவுட்டில் அதீத கவனம் செலுத்த அவர் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.

Comments