ரஜினிகாந்துடன் நடிப்பது வரம் – நடிகர் ஆதி!!!

Saturday,8th of June 2013
சென்னை::மிருகம்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமானவர் ஆதி.தொடர்ந்து ‘ஈரம், அரவான்’ ஆகிய படங்கள் அவருடைய திறமையை வெளிக்காட்டும் படங்களாக அமைந்தன.
 
தற்போது ரஜினிகாந்துடன் ‘கோச்சடையான்’ திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
 
இப்படம் பற்றி அவர் கூறுகையில், “இந்த படம் நிச்சயமாக  என் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்றார் . கோச்சடையான்  படத்தின் சரித்திர கால வசனங்களுக்காக மெனக் கேட் டு பயிற்சி செய்து வரும் ஆதி, இந்த அனுபவம் தமிழ் மொழி மேல் தனக்கு உள்ள அபிமானத்தை கூட்டி இருப்பதாக கூறினார்.
 
இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்டன் நடிப்பது ஒரு வரம் என்று சொல்ல வேண்டும் ,” என்றார் .
 
அடுத்து அவரது சகோதரர் சத்ய பிரபாஸ் இயக்கத்தில் ‘யாகாவாராயினும் நாகாக்க’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் நிச்சயமாக தனது திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல்லா இருக்கும் என்கிறார் ஆதி.
2013ம் வருடத்தின் பிற்பகுதி தனக்கு பொற்காலமாக இருக்கும் என ந
ம்பிக்கையுடன் இருக்கிறார்.

Comments