கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Monday,11th of June 2013
சென்னை::களவாணி‘, ‘வாகை சூடவா‘ பட இயக்குனர் சற்குணம் அடுத்து தனுஷ் நடிக்கும் ‘நய்யாண்டி‘ படத்தை இயக்குகிறார். இதில் சிவகார்த்திகேயனும் நடிப்பார் என்று தெரிகிறது. ஏற்கனவே ‘3‘ படத்தில் தனுஷுடன் சேர்ந்து நடித்திருப்பதுடன் அவர் தயாரித்த ‘எதிர்நீச்சல்‘ படத்தில் ஹீரோவாக நடித்தார் சிவ கார்த்திகேயன். இதேபோல் தனுஷ் தயாரிக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார்.

மாதவன் பார்த்த 2வது சிங்கம்

சூர்யா நடித்துள்ள ‘சிங்கம் 2‘ படத்திற்கு 4க்கும் மேற்பட்ட டிரைலர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதன் 2 டிரைலர்கள் வெளியாகி உள்ளது. ஆன் லைனில் இது ரசிகர்களின் வரவேற்பை அமோகமாக பெற்றிருக்கிறதாம். ஆன்லைனில் இதைபார்த்த நடிகர் மாதவன், டிரைலர் பிரமாதமாக வந்திருப்பதாக புகழ்ந்திருப்பதுடன் படமும் பாக்ஸ் ஆபிசில் வெற்றி பெறும் என நம்புவதாக குறிப்பிட்டிருக்கிறார். சூர்யா, மாதவன் இருவரும் மணிரத்னத்தின் ‘ஆய்த எழுத்து‘ என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

கோலிவுட்டுக்கு வருவாரா பாவனா?

‘சித்திரம் பேசுதடி‘ நாயகி பாவனா அடுத்து ‘ஜெயம் கொண்டான்‘, ‘தீபாவளி‘ உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக கடந்த 2010ம் ஆண்டு அஜீத்துடன் ‘அசல்‘ படத்தில் நடித்தவர் அதன்பிறகு மலையாளம், கன்னட படங்களில் நடிக்கச் சென்றார். 3 ஆண்டு ஆகியும் கோலிவுட் பக்கம் தலைகாட்டவில்லை. தற்போது மலையாளத்தில் ‘ஹனி பீ‘ படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் தனது 27வது பிறந்த நாளை கொண்டாடினார். மற்ற மொழிகளில் நடிக்க சென்ற பாவனா மீண்டும் கோலிவுட் வருவாரா என்பது கேள்விக் குறியாக உள்ளதாம்.

அமிதாப் கண்ணீர்

ஹீரோ, ஹீரோயின் வீடுகளில் பொமரியன், பாக்ஸர், டால்மேஷன் போன்ற வெளிநாட்டு நாய்களுக்கு செல்லம் அதிகம். சூப்பர் ஸ்டார் வீட்டு நாய் என்றால் கேட்க வேண்டுமா? கடந்த 2006ம் ஆண்டு அமிதாப்பின் பிறந்த நாளன்று அவருக்கு பரிசாக வந்தது ‘ஷெனோக்‘ நாய்க்குட்டி. இத்தனை வருடம் அவரை சுற்றி வந்துக்கொண்டிருந்த நாய் சமீபத்தில் இறந்தது. இந்த பிரிவை தாங்க முடியாமல் சோகத்தில் மூழ்கிய அமிதாப் தனது டுவிட்டர் பக்கத்தில் அதன் படத்தை போட்டு கண்ணீருடன் குட் பை சொல்லி இருக்கிறார்....
 
ஆத்தா நான் பாஸாயிட்டேன்

‘கடல் படம் முடிந்த கையோடு ‘யான் பட ஷூட்டிங்கில் பங்கேற்றார் துளசி. இந்நிலையில் 10ம் வகுப்பு தேர்வு குறுக்கிட ஷூட்டிங்கிற்கு லீவு போட்டுவிட்டு பரீட்சை எழுதச் சென்றார். 500க்கு 458 மார்க் வாங்கி அம்மா ராதாவை ஆச்சர்யத்தில் மூழ்கடித்தாராம் துளசி. உடனே மகளுக்கு பரிசுகள் வாங்கிக் கொடுத்து சந்தோஷப்படுத்தினாராம் ராதா.

தாடி வளர்க்கும் மாதவன்

மீசை தாடி இல்லாமல் டிரிம்மான ஹேர் கட்டுடன் சாக்லேட் பாயாக ‘அலைபாயுதே படத்தில் நடித்த மாதவன், ‘தம்பி, ‘பிரியசகி படத்தில் நீண்ட முடியுடன் நடித்தார். ‘ஆய்த எழுத்து படத்தில் முரட்டு மீசையும் வைத்துக்கொண்டார். தற்போது மீசை, தாடி வளர்த்து இது மாதவன்தானா என்று கேட்கும் அளவுக்கு ஆளே அடையாளம் தெரியாமல் மாறி இருக்கிறாராம். எந்த படத்துக்கான கெட்டப் என்றால் இப்போதைக்கு அது சஸ்பென்ஸ் என்கிறார்.

புது படத்தில் தமன்னா

‘ஹ¤ம்மத்வாலா‘ இந்தி படத்தில் அஜய் தேவ்கனுடன் நடித்தார் தமன்னா. இதையடுத்து புதிய பட வாய்ப்புக்காக காத்திருந்தார். தற்போது சைப் அலிகான் நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இதில் தமன்னா தவிர இஷா குப்தா, சோனல் சவுகான் என மேலும் 2 ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.

சிறப்பு பூஜை செய்த ஹீரோயின்

பாலிவுட் ஹீரோயின் பிரியங்கா சோப்ரா, தனது தந்தை டாக்டர் அசோக் சோப்ரா மீது மிகுந்த பாசம் கொண்டவர். கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ள அசோக் தற்போது சீரியஸ் கண்டிஷனில் மும்பை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சோகத்தில் இருக்கும் பிரியங்கா ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு தந்தையின் அருகில் இருந்து அவரை கவனித்து வருகிறார். தந்தையின் உடல்நிலை விரைவில் குணம் அடைய வேண்டி தனது வீட்டில் சிறப்பு பூஜை நடத்தினார்....

 
வாத்தியாருக்கு வாத்தியார்

கல்லூரி தமிழ் பேராசிரியர் ஞான சம்பந்தன் அப்பா வேடங்களில் நடிக்கிறார். ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே‘ படத்தில் ஹீரோயினின் மலையாளி அப்பாவாக நடிக்க கேட்டார் இயக்குனர் எஸ்.எஸ்.குமரன். மலையாளம் பேச தெரியாத ஞான சம்பந்தன் தனது நிலையை நண்பர் கமல்ஹாசனிடம் கூறினார். உடனே அவரை ஒரு வாரம் தனது அலுவலகத்துக்கு வரவழைத்து மலையாளம் பேச கற்றுத்தந்தாராம் கமல். இதையறிந்த இயக்குனர் படத்தின் டைட்டிலில் கமலுக்கு தேங்க்ஸ் கார்ட் போட்டிருக்கிறார்.
தனுஷின் ஒரே தோழி

இந்தி படத்தை இயக்கும் ஆசையில் பாலிவுட் ஹீரோக்களை சந்தித்த தனுஷ் திடீரென்று ‘ராஞ்சனா‘ படத்தில் ஹீரோவானார். ஷூட்டிங் புறப்படுவதற்கு முன்பே மனைவி ஐஸ்வர்யாவிடம் இந்தி கற்க தொடங்கியவர் பிறகு சொந்தமாக டப்பிங் பேசும் அளவுக்கு தீவிர பயிற்சி பெற்றார். படம் முடிந்து வரும் 21ம் தேதி ரிலீசுக்கு தயாராகிவிட்டது. இந்தியில் டப்பிங் பேச சிரமப்பட்டாலும் சமாளித்து முடித்தார். அவருக்கு பாலிவுட்டில் இருக்கும் ஒரே தோழி ராஞ்சனா பட ஹீரோயின் சோனம் கபூர்தானாம்.

கவுதம் கார்த்திக்கு பாடிய அனிருத்

‘கடல்‘ படத்தையடுத்து கவுதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்துக்கு டி.இமான் இசை அமைக்கிறார். இப்படத்துக்காக ஒரு பாடல் பாட வேண்டும் என அனிருத்திடம் இமான் கேட்டபோது, ‘நான் நல்ல பாடகர் கிடையாது‘ என அனிருத் கூற ‘முயற்சி செய்வோம் வாருங்கள்‘ என்று முதுகில் தட்டிக்கொடுத்தார் இமான். பாடல் பதிவு முடிந்ததில் இருவருமே சந்தோஷமாக உள்ளனர்.
மீண்டும் டபுள் ரோல்

அமீர் இயக்கிய ‘ஆதிபகவன்‘ படத்தில் டபுள் ஆக்ஷனில் நடித்தார் ஜெயம் ரவி. இதையடுத்து சமுத்திரக்கனி இயக்கும் ‘நிமிர்ந்து நில்‘ படத்தில் மீண்டும் டபுள் ஆக்ஷனில் நடிக்கிறார். இந்த படத்தில் சமுத்திரக்கனி நடிக்கவில்லையாம். அமலா பால் ஹீரோயினாக நடிக்கிறார்.

Comments