30th of June 2013
சென்னை::தனுஷ் இந்தியில் நடித்துள்ள படம் 'ராஞ்சனா' இப்படம் தமிழில் 'அம்பிகாபதி' என்ற தலைப்பில் ஜூன் 28ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இப்படத்தின் தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவாஜி நடித்த அம்பிகாபதி படத்தை தயாரித்த ஏ.எல்.எஸ் நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் பி.ஆனந்தன் என்பவர் நோட்டீஸ் அனுப்பினார். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கு மனுவில், "அம்பிகாபதி படத் தலைப்பை ஏ.என்.பி. நிறுவனத்துக்குத்தான் விற்றோம். வட இந்திய நிறுவனமான ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு விற்க வில்லை. எனவே அம்பிகாபதி தலைப்பை பயன்படுத்த கூடாது." என்று கூறப்பட்டு இருந்தது.
27ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. பின்னர் விசாரணை நேற்றைக்கு தள்ளி வைக்கப்பட்டது. நேற்று (ஜூன் 28) படம் வெளியாகும் தேதி நிர்ணயிக்கப்பட்டதால், நேற்று காலை முதல் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது ஏ.எல்.எஸ். பட நிறுவனத்தினரும், ஈராஸ் இன்டர்நேஷனல் பட நிறுவனத்தினரும் சமரச உடன்பாடு செய்து கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதையடுத்து ஏ.எல்.எஸ் நிறுவனத்திடம் இருந்து ஈராஸ் இண்டர் நேஷனல் நிறுவனம் அம்பிகாபதி தலைப்பை பயன்படுத்துவதற்கான உரிமையை வாங்கியது. இதையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அம்பிகாபதி படத்தலைப்பை பயன்படுத்துவதற்கான தடையும் நீங்கியது. இதனால் குறிப்பிட்ட படி அம்பிகாபதி படம் நேற்று

Comments
Post a Comment