இரும்பு குதிரையாகும் அதர்வா!!!

Saturday,8th of June 2013
சென்னை::பரதேசி' படத்தில் தனது வித்தியாசமான நடிப்பின் மூலம் அனைவரது பாராட்டையும் பெற்றவர் அதர்வா. அப்படத்தினை தொடர்ந்து பல்வேறு வாய்ப்புகள் வந்தாலும் அடுத்து ஏதாவது வித்தியாசமான கதையில் தான் நடிக்க வேண்டும் என்று காத்திருந்தார்.

அது போலவே அடுத்ததாக அதிரடியான ஆக்ஷன் கதையில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் அதர்வா. அப்படத்தினை தயாரிக்க இருக்கிறது AGS நிறுவனம். படத்திற்கு 'இரும்பு குதிரை' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்

'ஈரம்' அறிவழகனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த யுவராஜ் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தில் அதர்வா ஒரு பைக் ரேசராக நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க பாங்காக்கில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

'ஏழாம் அறிவு' படத்தில் வில்லன் வேடத்தில் நடித்து அசரடித்த 'Johnny Tri Nguyen' இப்படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிபு வெளியாக இருக்கிறது.

உடன் நடிக்கும் இதர நடிகர், நடிகையர் தேர்வு தற்போது படுஜோராக நடைபெற்று வருகிறது.

Comments