தனுஷ் அளித்த மனம் திறந்த பேட்டி!!!

Saturday,8th of June 2013
சென்னை::தனுஷ் அளித்த மனம் திறந்த பேட்டி

என்னுடைய மாமனார் ரஜினிகாந்த்தை விட மனைவி ஐஸ்வர்யா நூறு மடங்கு எளிமையானவர் என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.

மீடியாக்களிடம் இருந்து ஒதுங்கி வந்த தனுஷ் நீண்ட நாட்கள் கழித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு மனம் திறந்த பேட்டி ஒன்று அளித்துள்ளார்.

அதில், என்னுடைய மாமனார் ரஜினியை தான் எளிமைக்கு உதாரணமாக சொல்வார்கள். ஆனால் என் மனைவியும் ரஜினி மகளுமான ஐஸ்வர்யாவுடன் பழகினால் தான் ஐஸ்வர்யா ரஜினியை விட 100 மடங்கு எளிமையானவர் என்பது புரியும். அவர் எப்போதுமே தான் ஒரு சூப்பர் ஸ்டாரின் மகள் என காட்டிக்கொண்டது இல்லை. எல்லோரையுமே சமமாக நினைத்து பழகுவார்.

ஐஸ்வர்யாவுக்கு முன்பே நான் பள்ளியில் படித்தபோது எனக்கு ஒரு காதல் இருந்தது. ஆனால் அது நிறைவேறவில்லை. எனது பள்ளிப்பருவ காதலி இப்போது அமெரிக்காவில் இருக்கிறாள். இன்னமும் மெயிலில் நட்பு மட்டும் தொடர்கிறது.

ராஞ்சனா படத்துக்கு முன்பு டைரக்ட் செய்யும் எண்ணம் இருந்தது. ஆனால் ராஞ்சனா கதை என்னை இம்ப்ரெஸ் செய்ததால் இயக்கும் எண்ணத்தை தள்ளிப்போட்டுவிட்டு நடிப்பை தொடர்ந்துவிட்டேன் என்றார் தனுஷ்.

Comments