பாம்பை கையில் எடுத்து விளையாடி மிரள வைத்த நயன்தாரா!!!

Thursday,6th of June 2013
சென்னை::படப்பிடிப்பில் நயன்தாரா குட்டிப் பாம்பை கையில் எடுத்து தைரியமாக விளையாடியிருக்கிறார்.
 
பாம்பை காண்டாலே படையே நடுங்கும் என்பது மூத்தோர் வாய்மொழி. ஆனால் அந்த பாம்பை கண்டு படை நடுங்குமோ, இல்லையோ நயன்தாரா நடுங்க மாட்டார்னு நிரூபித்திருக்கிறார்.
 
ஆமாங்க, இது கதிர்வேலன் காதல் படப்பிடிப்பின்போது குட்டிப் பாம்புடன் தைரியமாக விளையாடியிருக்கிறார்.
 
உதயநிதிஸ்டாலின் - நயன்தாரா நடிக்கும் இது கதிர்வேலன் காதல் என்கிற படப்பிடிப்பு கோவையில் நடந்து வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பின்போது நயன்தாரா குட்டி பாம்பு ஒன்றை கையில் எடுத்து விளையாடி படக்குழுவினர் அனைவரையும் மிரள வைத்திருக்கிறார்.
 
மேலும் அந்த பாம்புக்கு பாபு என்று பெயர் வைத்துள்ளார். நயன்தாராவின் தைரியத்தை பார்த்ததும் அங்கிருந்த படக்குழுவினரும் பாம்போடு விளையாடியுள்ளனர்.
 

Comments