காஜல் அகர்வாலுக்கு தொழில் ரகசியங்களை போதித்த மோகன்லால்!!!


12th of June 2013
சென்னை::மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் மோகன்லால். இதுவரை தமிழில் சிறைச்சாலை, இருவர், பாப்கார்ன், உன்னைப்போல் ஒருவன் உள்பட பல படங்களில் நடித்தவர் இப்போது முதன்முறையாக விஜய்யுடன் ஜில்லா படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் விஜய்யின் அப்பாவாக நடிக்கும் மோகன்லாலும் கதையின் முக்கிய பார்ட்டில் வருகிறாராம். அவருக்கும், காஜல் அகர்வாலுக்குமிடையே கூட நிறைய காட்சிகள் உள்ளதாம். அதனால்தான் மதுரை லொகேஷனில் முதலில் அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினாராம் இயக்குனர் நேசன்.

அப்படி மோகன்லாலுடன் நடித்தபோது முதலில் அவருக்கு ஈடு கொடுத்து நடிக்க முடியாமல் திணறினாராம் காஜல். இதைப்பார்த்து, பின்னர் ஓய்வாக இருக்கும் நேரங்களில் காஜலை அழைத்து எந்த மாதிரியான காட்சிகளுக்கு எந்த மாதிரியான ரியாக்சனை வெளிப்படுத்த வேண்டும் என்ற மலையாள டெக்னிக்குகளை அவருக்கு வாரி வழங்கியிருக்கிறார் மோகன்லால். அதன்பிறகுதான் அவர்கள் நடித்த பெருவாரியான காட்சிகள் சிங்கிள் டேக்கில் ஓகே ஆனதாம்.

இதனால் புல்லரித்துப்போனாராம் காஜல். என்ன இருந்தாலும் சீனியர் சீனியர்தான். என்று மோகன்லால் பற்றி பெருமையாக பேசி வரும் காஜல். இந்த படத்துக்குப்பிறகு மோகன்லால் புண்ணியத்தில் நான் மலையாள படங்களிலும் நடிக்கத் தொடங்கி விடுவேன் என்றும் தனது அபிமானிகளிடம் கூறி வருகிறார்.

Comments