18th of June 2013
சென்னை::வாய்ப்பு கொடுங்கள் என யாரிடமும் கெஞ்ச மாட்டேன் என்கிறார் நடிகை சினேகா. தமிழ் திரையுலகின் புன்னகை அரசி என அழைக்கப்படுபவர் நடிகை சினேகா.
சென்னை::வாய்ப்பு கொடுங்கள் என யாரிடமும் கெஞ்ச மாட்டேன் என்கிறார் நடிகை சினேகா. தமிழ் திரையுலகின் புன்னகை அரசி என அழைக்கப்படுபவர் நடிகை சினேகா.
இவர், நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகும் இருவரும் தொடர்ந்து நடித்து வருகிறார்கள். ஆனால் சினேகாவோ நடிப்பதை குறைத்து கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் முன்பு மாதிரி அதிக படங்களில் நடிப்பதில்லை.
இந்நிலையில் நடிப்பிற்கு முழுக்கு போட்டு விட்டீர்களா என்ற கேள்விக்கு சினேகா, திருமணத்திற்கு முன்பு ஹரிதாஸ் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். ஆனால் திருமணத்துக்கு பிறகுதான் அதன் படப்பிடிப்பு முடிந்து படம் வெளியானது. எல்லா பெண்ணும் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும் என எண்ணுவார்கள், அதைத்தான் இப்போது நான் செய்து கொண்டிருக்கிறேன்.
நல்ல கதாபாத்திரங்கள் வந்தால் ஏற்பேன். அதுவும் என்னை தேடி வர வேண்டும். மேலும் வாய்ப்பு தரும்படி யாரிடமும் கெஞ்சி நிற்கமாட்டேன் என இவ்வாறு சினேகா பதில் கூறினார்.
Comments
Post a Comment