19th of June 2013
சென்னை::விஜய்யைப்பொறுத்தவரை ஒரு உறுதியான கொள்கை வைத்திருக்கிறார். அதாவது எந்த இயக்குனராக இருந்தாலும் தன்னிடம் முழுக்கதையையும் சொல்ல வேண்டும். அதன்பிறகுதான் அந்த கதையில் நடிப்பதா? வேண்டாமா? என்பது பற்றி முடிவெடுப்பேன் என்பதில் உறுதியாக இருப்பவர். டைரக்டர் கெளதம்மேனன்கூட யோஹன் அத்தியாயம் ஒன்று படத்துக்கு ஒரு வருடத்துக்கு முன்பே விஜய்யை புக் பண்ணியிருந்தார். ஆனால், கடைசிவரை அவரிடம் கதை சொல்லவில்லை. கதை சொன்னால்தான் நடிப்பேன் என்று விஜய் சொன்னபோது இவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இதனால் அப்படம் ட்ராப் ஆனது.
அதையடுத்து, இப்போது விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும் என்று ஆசைப்படும் முன்னணி இயக்குனர்கள்கூட கதையை தெளிவாக வடிவமைத்து விட்டுதான் அவரை அணுகுகிறார்கள். இந்த நிலையில், விஜய்யை வைத்து படம் பண்ண வேண்டும் என்ற ஆசை மனதளவில் இருந்தாலும், அவர் கதை கேட்பாரே என்று அவரிடம் கால்சீட் கேட்க தயங்கி நின்று கொண்டிருக்கிறார் டைரக்டர் சுந்தர்.சி.,
இதுபற்றி அவர் கூறுகையில், என்னைப்பொறுத்தவரை பக்காவாக திரைக்கதை அமைத்தாலும், கோர்வையாக கதை சொல்லும் ஆற்றல் கிடையாது. ஆனால் விஜய்யோ கதை சொல்லாமல் நடிக்க வர மாட்டார். இப்படியொரு பிரச்னை இருக்கும்போது நான் எப்படி விஜய்யை வைத்து படம் இயக்க முடியும் என்கிறார் சுந்தர்.சி.,

Comments
Post a Comment