நெடுஞ்சாலை’ இசை வெளியீட்டில் ஏ.ஆர். ரகுமான்!!!

27th of June 2013
சென்னை::பைன் போக்கஸ் படநிறுவனம் சார்பாக ஆஜூ மற்றும் சௌந்தர்ராஜன் தயாரிப்பில், ‘சில்லுன்னு ஒரு காதல்’ கிருஷ்ணா இயக்கத்தில் ஆரி,சுவேதா நடிக்கும் படம் ‘நெடுஞ்சாலை’.
 
சத்யா இசையில் தயாராகும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் ஜுலை 1ம் தேதியன்று சென்னையில் உள்ள கமலா திரையரங்கில்  நடைபெற இருக்கிறது.
 
விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் ஏராளமான திரையுலகினர் பங்கு பெற உள்ளனர்.
இந்த படத்தின் டீசர் சமீபத்தில் You Tube-ல் வெளியிடப்பட்டது.  அதை இது வரை ஐந்து லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
 
இந்த வரவேற்பு படம் வெளியாகும் போது ரசிகர்கள் மத்தியிலும் இருக்கும் என்கிறார் இயக்குனர் கிருஷ்ணா.

Comments