18th of June 2013
சென்னை::தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல், ஹீரோக்களாலும் விரும்பப்படும் நடிகை என்ற பெருமை, ஹன்சிகாவுக்கு உண்டு. ஹீரோயின் என்ற பந்தா இல்லாமல், படப் பிடிப்புக்கு, வந்தோம், போனோம் என்று இல்லாமல், முழு ஈடுபாட்டுடனும், திறமையுடனும் நடிப்பதால், இயக்குனர்களாலும், விரும்பப்படும் நடிகையாகி இருக்கிறார், ஹன்சிகா. தனக்கு கிடைத்துள்ள, இந்த பெருமை குறித்து, அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில்,
எந்த காட்சியாக இருந்தாலும், எனக்கு திருப்தி ஏற்படும் வரை, நடிப்பேன். அதற்காக, ஓவர் ஆக்டிங் செய்ய மாட்டேன்.
தற்போது வெளியாகியுள்ள ஒரு படத்தில், சித்தார்த்துடன் ஜோடி சேர்ந்திருக்கிறேன். சித்தார்த், எனக்கு ரொம்பவும் மேட்ச்சான ஜோடி. படத்தில், எங்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக வந்திருக்கிறது என, கூறியுள்ளார். சித்தார்த்தும், சமந்தாவும், ஏற்கனவே, காதல் வானில் சிறகடித்து பறப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ஹன்சிகாவின் இந்த அறிவிப்பு, சமந்தாவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.
Comments
Post a Comment