அஜீத்துக்காக பின்னணி பாடுகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்!!!

Sunday,2nd of June 2013
சென்னை::சமீபகாலமாக இசையமைப்பாளர்களுக்கிடையேயும் நல்லதொரு ஆரோக்கிய சூழல் உருவாகியுள்ளது. என் இசையை தவிர யாருடைய இசையும் எனக்குப்பிடிக்காது என்று சொல்லி வந்த காலம்போய் இப்போது, மற்றவர்களின் தரமான இசையையும் இசையமைப்பாளர்கள் வெளிப்படையாக பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அதோடு, ஒரு இசையமைப்பாளரின் இசையில் இன்னொரு இசையமைப்பாளர் பின்னணி பாடும் சூழலும் தற்போது அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், தனுஷ் நடிப்பில்

இதையடுத்து, ஏ.ஆர்.ரஹ்மானையும தனது இசையில் பாட வைக்க நினைத்த யுவன்ஷங்கர்ராஜா, தற்போது தான் இசையமைத்துள்ள வலை படத்தில் அஜீத்துக்காக ஒரு பாடலை பாட ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவரும் கண்டிப்பாக பாடித்தருவதாக கூறியுள்ளாராம்.
உருவாகியுள்ள மரியான் படத்துக்கு தனுசுக்காக ஒரு பாடல் பாடியிருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். ஆனால், அவரது குரல் தனுசுக்கு பொருந்தவில்லை. அதனால் உடனடியாக அந்த பாடலை தனக்கு பாடித்தருமாறு இசையமைப்பாளர் யுவன்ஷங்கர்ராஜாவை அழைத்தார் ஏ.ஆர்.ரஹ்மான். அவரும் மறுபேச்சின்றி சென்று பாடிக்கொடுத்தார்.

Comments