பிலிம் பேஃர் விருது: ஐதராபாத்தில் நடந்த விழாவில் சூர்யா, காஜல் அகர்வாலுக்கு விருது!!!

17th of June 2013
 சென்னை::தமிழ், தெலுங்கில் சிறந்த நடிகர், நடிகைகளுக்கு விருது வழங்கும் விழா ஐதராபாத்தில் நடந்தது. இதில் தமிழில் சிறந்த நடிகராக சூர்யா தேர்ந்தெடுக்கப்பட்டார். மாற்றான் படத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டையர் வேடத்தில் சிறப்பாக நடித்து இருந்ததாக அவரை தேர்வு செய்தனர். சிறந்த நடிகையாக காஜல் அகர்வால் தேர்வு செய்யப்பட்டார். துப்பாக்கி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேர்வு செய்தனர்.

இதுபோல் தெலுங்கில் சிறந்த நடிகராக பவன் கல்யாண், சிறந்த நடிகையாக சமந்தா தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிறந்த வில்லன் நடிகராக சுதீப் தேர்வானார். சூர்யாவும், காஜல் அகர்வாலும் மேடையில் ஏறி விருதுகளை பெற்றக் கொண்டனர்.

தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா இவ்விருதுகளை வழங்கினார். தெலுங்கில் சிறந்த நடிகராக பவன் கல்யான், சிறந்த நடிகையாக சமந்தா தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த வில்லன் நடிகர் விருது 'நான் ஈ' படத்தில் நடித்த சுதீப்புக்கு கிடைத்தது.

நாகர்ஜூனா, நித்யாமேனன் போன்றோரும் சிறந்த நடிகர், நடிகை விருதை பெற்றனர். விழாவையொட்டி நடிகர், நடிகைகள் நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

tamil matrimony_INNER_468x60.gif

Comments