மூன்று ஹீரோயின்களில் ஒருவராக தமன்னா!!!

Wednesday,5th of June 2013
சென்னை::தமன்னா நடித்த முதல் ஹிந்தி படமான ‘ஹிம்மத்வாலா’ படு தோல்வி அடைந்தது.
 
அந்த படம் மிகப் பெரிய தோல்வியைத் தழுவியதால் வருத்தத்தில் இருந்த தமன்னாவுக்கு தெலுங்கில் வெளிவந்த ‘தடகா’ மாபெரும் வெற்றி பெற்றதால் அந்த வருத்தம் மறைந்து மகிழ்ச்சி வந்தது.
 
இப்போது ‘ஹிம்மத்வாலா’ இயக்குனர் சஜித் கான் அடுத்து இயக்கப் போகும் ஹிந்திப் படத்திலும் தமன்னா நடிக்கப் போகிறார். ஆனால், மூன்று ஹீரோயின்களில் ஒருவராக. மற்ற இரண்டு ஹீரோயின்களாக இஷா குப்தா, சோனம் சௌஹான் நடிக்க இருக்கிறாரகள். சைப் அலி கான் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கப் போகிறார்.
 
வரும் செப்டம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகப் போகிறது.
அக்ஷய் குமார் ஜோடியாக ‘ஹம்ஷகல்’ என்ற படத்திலும் தமன்னா நடிக்கப் போகிறார்.
 
தமிழ், தெலுங்கில் வெற்றி நாயகியாக வரும் வலம் தமன்னா, இனியாவது  ஹிந்தியில் வெற்றி வாகை சூடுவாரா என்று பார்ப்போம்.
 
 

Comments