ஓவர் கிளாமர் என் உடம்புக்கு செட்டாகாது: அமலா பால்!!!

Tuesday,4th of June 2013
சென்னை::1  விஜயுடன் நடித்த   அனுபவம் பற்றி?ரொம்ப நல்ல அனுபவம். மிகப்பெரிய நடிகர் விஜயய் ஆனால்,  அனைவரிடமும் ரொம்ப இயல்பாக, அன்பாக பழகினார். "தலைவா படப்பிடிப்பு இத்தனை சீக்கிரம் முடிந்து விட்ட÷த என்று, நான் வருத்தப்படுகிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

2  "தலைவாவில் இரண்டு   ஹீரோயின்களாமே?
ராகினி என்ற மும்பை நடிகை ஒருவர் இருக்கிறார் என்றாலும், நான் தான் முதன்மை நாயகி. டூயட்டுக்கு மட்டு@ம என்னை பயன்படுத்தாமல்,  வித்தியாசமான ‌‌கோணத்திலும் நடிக்க வைத்துள்ளனர். அந்த வகையில், "தலைவா எனது கேரியரில் முக்கியமான படமாக இருக்கும்.

3  தெலுங்கில் அதிக  கிளாமராக நடிப்பதாக கூறப்படுகிறதே?
அப்படியெல்லாம் இல்லை. அங்குள்ள எல்லா நடிகைகளையும் போல் தான், நானும் நடிக்கிறேன். ஓவர் கிளாமர் என் உடம்புக்கு செட்டாகாது.

4  "சிந்து சமவெளி மாதிரியான  வேடங்களில், மீண்டும் நடிப்பீர்களா?
கண்டிப்பாக மாட்டேன். அந்த படத்தில் நடிக்கும்போது, எனக்கு சினிமாவைப் பற்றி, அதிகம் தெரியாது. அதனால், அப்படியொரு வேடத்தில் நடித்து அவப்பெயரை  பெற்றேன். அதை நினைத்து, இப்போது கூட வேதனைப்படுகிறேன்.

5 விஜயுடன்  நடித்தாயிற்று, அஜீத்துடன் எப்போது?
அஜீத்துடன் கட்டாயம் நடிக்க வேண்டும். அவர் மட்டுமின்றி, அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி சேர வேண்டும். அத்துடன்,  எதிர்காலத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள கதைகளிலும், நடிக்க வேண்டும்என்ற ஆர்வமும் உள்ளது.

Comments