கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

28th of June 2013
சென்னை::டால்பினுடன் சண்டை:-ரஜினி நடித்துள்ள ‘கோச்சடையான்’ படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்து விட்டன. ரிலீஸ் தேதியை முடிவு செய்வதில் மும்முரமாக இருக்கிறார் இயக்குனர் சவுந்தர்யா. டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியிடுவதற்கான தேதியையும் விரைவில் அறிவிக்க உள்ளனர். ‘ஏ.ஆர்.ரகுமானின் இசைதான் படம் முழுவதும் காட்சி களை தூணாக தாங்கி நிற்கிறது’ என கூறும் சவுந்தர்யா, இந்தப் படத்தில் நடுக்கடலில் டால்பினுடன் ரஜினி சண்டையிடும் காட்சி நீண்ட நேர சீனாக இடம் பெறுகிறது என்றார்.

ஹன்சிகா ஜோடியா? பிரண்ட்ஸ் கிண்டல்

‘மெரினா’, ‘மனம் கொத்திப் பறவை’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘எதிர்நீச்சல்’ படங்களில் நடித்திருக்கும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘மான் கராத்தே’ படத்தில் ஹன்சிகா நடிக்கிறார். இதை தனது நண்பர்களிடம் சிவா கூறியபோது அவர்கள் நக்கலடிக்க தொடங்கிவிட்டார்களாம். ‘உனக்கு ஜோடி ஹன்சிகாவா’ என்று கமென்ட் அடித்து சிரித்தார்களாம். புதிய படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ள நிலையில் சிவா நடித்துள்ள ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ளது. அடுத்து தனுஷ் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

சண்டை போடும் டாப்ஸி

‘ஆடுகளம்’ படத்தில் நடித்த டாப்ஸி, தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கும் ‘முனி’ 3-ம் பாகம் ஷூட்டிங்கில் நடிக்கிறார். இதில் அவருக்கு அதிரடி சண்டை காட்சிகள் தரப்பட்டுள்ளன. ரோப் கட்டி இழுத்து அந்தரத்தில் பாய்ந்து சண்டைபோடும் காட்சிகளில் சமீபத்தில் நடித்தார் டாப்ஸி. ஜூலை 2-வது வாரம் வரை அவர் இப்பட ஷூட்டிங்கில்தான் இருப்பாராம்.

மொட்டை அடித்தார் மனிஷா

கடந்த ஆண்டு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட மனிஷா கொய்ராலா, அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணம் அடைந்தார். நேற்று அவர் மும்பை திரும்பினார். சிகிச்சைக்காக அவர் மொட்டை போட்டிருந்தார். அமெரிக்காவில் இருக்கும்போது மும்பையில் மழை பெய்யும் தகவலை கேட்டு மகிழ்ந்த மனிஷா, ‘சீக்கிரம் மும்பை சென்று மொட்டை மாடியில் நின்றபடி மழையில் நனைய ஆசையாக இருக்கிறது’ என டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார். இன்னும் சிகிச்சை பாக்கி உள்ளதால் சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் அமெரிக்கா செல்ல உள்ளார்...
 
சென்டிமென்ட் படுத்தும் பாடு

சினிமாவில் சென்டிமென்ட் பலரையும் பாடாய்படுத்துகிறது. ராசியான நாளில் தொடங்கி ராசியான லொகேஷன்வரை இதில் அடக்கம். அதேபோல் ‘சின்னதம்பி படம் வெளியாகி ஹிட்டானபோது ‘சி என்ற எழுத்தில் தொடங்கும் வகையிலேயே நிறைய படங்கள் வந்தன. ‘பீட்சா‘, ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா‘ வெற்றிக்கு பிறகு ‘பிரியாணி‘, ‘கல்யாண சமையல் சாதம்‘, ‘ஜிகர்தண்டா‘ என டைட்டில்கள் வைக்கப்படுகின்றன.
 
சீனாவில் ஸ்ரீதேவி

சீனாவில் உள்ள மக்காயு மாநிலத்தில் சர்வதேச இந்திய திரைப்பட அகடமியின் விருது விழா அடுத்த மாதம் நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ‘முக்காலா முகாபலா‘ பாடலுக்கு பிரபுதேவா நடனம் ஆடுகிறார். தன்னுடன் ஆடுவதற்கு 49 வயதான ஸ்ரீதேவியை அழைத்தார். தன்னால் முடியாது என அவர் தயங்கினார். ‘நான் இருக்கிறேன். எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறேன். தைரியமாக ஆடுங்கள்‘ என்று பிரபுதேவா தைரியம் கொடுத்தவுடன் அவரும் ஓகே சொல்லிவிட்டாராம்.

டிக் அடித்தால் ஓகே

இணையதள பேஸ்புக் பகுதியில் பிரபலங்களின் போலியான பேஸ்புக் கணக்குகளின் மூலம் தவறான தகவல்களை சிலர் பரப்புகின்றனர். கமல் பெயரிலும் போலி பேஸ்புக் கணக்குகள் வைத்து ச¤லர் ஈடுபடுகின்றனர். இதை தவிர்க்கும் முயற்சியாக இனி கமலின் ஒரிஜினல் பேஸ்புக் பகுதியில் எந்தவொரு மெசேஜாக இருந்தாலும் அது ப்ளூ கலரில் டிக் செய்யப்பட்டிருக்கும். இதுதான் உண்மையான விவரங்களுக்கு அடையாளமாக இருக்கும். இதற்கான பொறுப்பை குறிப்பிட்ட ஒருவரிடம் கமல் ஒப்படைத்திருக்கிறார்.

அனுஷ்காவுக்காக அவசரம்

செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா& அனுஷ்கா நடித்த ‘இரண்டாம் உலகம்‘ பட ஷூட்டிங் இரண்டு வருடமாக நடந்து வந்தது. சமீபத்தில்தான் ஷூட்டிங் முடிந்தது. இதற்கிடையில் அனுஷ்கா நடித்த ‘சிங்கம் 2‘ படம் திரைக்கு வரவுள்ளது. தெலுங்கிலும் அவர் நடிக்கும் பெரிய பட்ஜெட் படங்களின் ஷூட்டிங்கும் தொடங்கி வேகமாக நடக்கிறது. இந்நிலையில் ‘இரண்டாம் உலகம்‘ படம் விரைவில் வெளிவர வேண்டும் என்று அனுஷ்கா விரும்புகிறாராம். கிராபிக்ஸ் மற்றும் எபக்ட்ஸ் வேலைகள் பட ரிலீசை தாமதப்படுத்துவதால் அதனை செல்வராகவன் முடுக்கிவிட்டிருக்கிறார். ஆனாலும் ரிலீஸ் தேதி பற்றி முடிவு செய்யவில்லையாம்....
 
திவ்யாவின் ஹாலிவுட் ஆசை

திட்டமிட்டபடி சில நாட்களுக்கு முன் இங்கிலாந்து புறப்பட்டு சென்றார் திவ்யா. அங்கு நடந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை பார்த்து ரசித்தார். பின்னர் அங்கு வந்திருந்த டென்னிஸ் வீரரும் ஹாலிவுட் பட அதிபருமான விஜய் அமிர்தராஜை சந்தித்து பேசியதுடன் அவரது ஆங்கில படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்தாராம்.

ஆத்திசூடி படித்த அஜீத்

அஜீத் தினமும் காலையில் தனது நண்பர்களுக்கு செல்போனில் ‘குட்மார்னிங்மெசேஜ் அனுப்புவார். இப்போது அந்த மெசேஜுடன் அவ்வையாரின் பொன் மொழிகளையும் அனுப்புகிறார். நண்பரை பார்க்க பெங்களூர் சென்ற அஜீத் தனது செல்போனில் நண்பர் வைத்திருந்த அவ்வையின் ஆத்திசூடியை டவுன்லோட் செய்துகொண்டு ஓய்வு நேரங்களில் தவறாமல் படிக்கிறார். தனது செ

பிரெஞ்ச் செல்லும் சிங்கம்

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் ‘சிங்கம் 2வரும் ஜூலை 5ம் தேதி ரிலீசுக்கு தயாராக உள்ளது. தெலுங் கில் ‘யமுடு 2என்ற பெயரில் வெளியாகிறது. சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த ஆடியோ விழாவில் பங்கேற்ற சூர்யா, அனுஷ்கா இருவரையும் மேடையிலேயே ஒரு பாட்டுக்கு ஆட வைத்தாராம் இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத். ‘சிங்கம் 2படத்தை பிரெஞ்சு மொழி யிலும் டப்பிங் செய்து ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள்.

பேஷன் ஷோ நடிகை

தமிழ், தெலுங்கு, இந்தி என எந்த மொழியிலுமே சமீரா ரெட்டிக்கு வாய்ப்புகள் இல்லை. கன்னடத்தில் ஒரு படத்தில் நடித்தார். அதற்கு பிறகும் அங்கும் அழைப்பு இல்லை. மலையாளத்திலும் இதே கதிதான். இதனால் மீண்டும் மாடலிங்கில் கவனம் செலுத்துகிறார். சமீபத்தில் டெல்லியில் நடந்த பேஷன் ஷோவில் பங்கேற்றார். பட வாய்ப்பு இல்லாவிட்டாலும் திருமணம் செய்யும் ஐடியா சமீராவுக்கு கிடையாதாம்.
ல்ல மகள் அனோஷ்காவுக்கும் இதை சொல்லித்தருகிறார்.

Comments