24th of June 2013
சென்னை::பாலிவுட் நடிகை ஆலியா பட், நடிகர் தனுஷ் ஜோடியாக புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மாற்றான் படத்திற்குப் பிறகு கே.வி.ஆனந்த் இயக்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார்.
படத்தில் அவருக்கு ஜோடியாக ஆலியா பட் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திப் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்த சோனம் கபூர் மறுபடியும் தனுஷ் உடன் இணைந்து நடிக்க ஆசை என்று பேட்டி கொடுத்து வரும் நிலையில் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் தனுஷ் உடன் ஜோடி சேர உள்ளார்.
1999ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஆலியா பட், கரண் ஜோஹர் இயக்கத்தில் 2012ல் வெளிவந்து ஹிட்டான ஸ்டூடன்ட் ஆஃப் த இயர் பாலிவுட் படத்தில் கதாநாயகியானார். தன் முதல் படத்திலேயே பாலிவுட் ரசிகர்களை மெய் மறக்கச் செய்த ஆலியா, தமிழ் ரசிகர்களையும் படுத்தியெடுப்பார் என்பது மட்டும் நிச்சயம்.
Comments
Post a Comment