எப்போதும் சிரிச்சிக்கிட்டே இருந்தா முகம் அழகா இருக்கும்! தமன்னாவின் அழகு ரகசியம்!!!

22nd of June 2013
சென்னை::சினிமாவில் நடிப்பவர்கள் பட்டாம் பூச்சிகளாக ஜொலிப்பதற்கு அவர்கள் கண்ட கண்ட க்ரீம்களை முகத்தில் பூசிக்கொள்வதே காரணம் என்றுதான் ரசிகர்கள் நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், பகல் முழுக்க மேக்கப் பூசிக்கொள்ளும் நடிகர்-நடிகைகள் முகத்தை கழுவிய பிறகு எந்த கரீம்களையும் முகத்தில் தேய்த்துக்கொள்வதில்லையாம்.

இதுபற்றி தமன்னா கூறுகையில், என்னைப்பொறுத்தவரை என் அழகை பராமரிக்க எந்த நவீன கிரீம்களையும் தொடுவதில்லை. மாறாக, பகல் முழுக்க வெயிலில் நடித்தால், வீட்டுக்கு சென்றதும், முகத்தை நல்ல தண்ணீரில் நன்றாக கழுவுவேன். பிறகு தயிரில் கடலை மாவை கலந்து அவ்வப்போது பூசுவேன். இரண்டே வாரத்துல பழைய கலரும், முக பொலிவும் வந்துவிடும். அது மட்டுமில்லாமல் எப்போதும் மனசை சந்தோசமா வச்சிக்குவேன். மனசுல எந்த கவலையும் கொள்ளாமல் சிரிச்சிக்கிட்டே இருந்தா அதுவே பெரிய அழகுதான்.

மேலும், உணவு விசயத்திலும் ரொம்ப கவனமாக இருக்கனும். சாப்பிடத்தானே செய்றோம். அது தோலை என்ன பண்ணும்னு நினைக்கக்கூடாது. நான்வெஜ் அயிட்டங்களை தவிர்த்து வெஜிடபிள்ஸ் உணவுகளை அதிகமா எடுத்துக்கிட்டா அதுவும் உடல் அழகில் பெரும் பங்கு வகிக்குது. என்னோட தோல் இவ்ளோ பளபளன்றனு இருக்குதுன்னா இதையெல்லாம் நான் கடைபிடிக்கிறதுதான் காரணம். வேற ஒரு ரகசியமும் இல்லை என்கிறார் தமன்னா.

Comments