அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா சினிமாவில் நடிக்க விரும்புவதாக சுந்தர்.சி கூறியதால் எனது ஜோடி ஆக்கினேன்':விஷால்!!!
28th of June 2013
சென்னை::அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா சினிமாவில் நடிக்க விரும்புவதாக சுந்தர்.சி கூறியதால் எனது ஜோடி ஆக்கினேன்' என்கிறார் விஷால். விஷால் நடிக்கும் படம் ‘பட்டத்து யானை'. பூபதி பாண்டியன் டைரக்ட் செய்கிறார். ஹீரோயினாக நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா நடிக்கிறார். இதுபற்றி விஷால் கூறியதாவது: மலைக்கோட்டை பட வெற்றிக்கு பிறகு 5 ஆண்டு கழித்து பூபதி பாண்டியன் இயக்கத்தில் பட்டத்து யானை படத்தில் பணியாற்றுகிறேன். அவரது நகைச்சுவை உணர்வு ஷூட்டிங்கின் போது மட்டுமல்ல சாதாரணமாக பேசும் போது கூட வெளிப்படும்.
ஒரு படத்துக்கு கதை அமைந்துவிட்டால் மட்டும் போதாது. அதை இயக்குனரின் எண்ணப்படி எடுக்க தயாரிப்பாளர் தேவை. அத்தகைய தயாரிப்பாளராக மைக்கேல் ராயப்பன் கிடைத்திருக்கிறார் ‘மதகத ராஜா' பட ஷூட்டிங்கின் போது பூபதி பாண்டியன் படத்தில் நடிப்பது பற்றி இயக்குனர் சுந்தர்.சியிடம் கூறினேன். அவர்தான் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா சினிமாவில் நடிக்க ஆவலாக இருப்பதாக கூறினார். எனது குரு அர்ஜுன். அவருடைய சம்மதத்துடன் ஐஸ்வர்யாவிடம் நடிக்க கேட்ட போது உடனே ஒப்புக் கொண்டார். இப்படத்துக்கு தமன் இசை அமைத்திருக்கிறார். பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

Comments
Post a Comment