கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

18th of June 2013
சென்னை::அப்பா தரும் டிப்ஸ்: அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா ‘பட்டத்து யானை‘ மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். விஷால் ஹீரோவாக நடிக்கிறார். ஏற்கனவே விஷால் நடித்த படங்கள் தெலுங்கில் டப்பிங் ஆகி இருக்கிறது. அதுபோல் இப்படம் தெலுங்கில் ‘தீரடு‘ என்ற பெயரில் டப்பிங் ஆகிறது. புதுமுகமாக அறிமுகமாகும் ஐஸ்வர்யாவுக்கு கேமரா பயம் இல்லையாம். ‘ஷூட்டிங் புறப்படுவதற்கு முன் தந்தை அர்ஜுனிடம் டிப்ஸ் கேட்டுக்கொள்வதால் கேமரா பயம் போய்விட்டதாம்.

வெளிநாட்டில் சுற்றும் ஈ

ஷாங்காய் திரைப்பட விழா விரைவில் நடக்கிறது. இதில் கமலின் புஷ்பக் (வசனம் இல்லாத படம்), ஆமிர்கானின் ‘3 இடியட்ஸ் படங்கள் திரையிடப்படுகிறது. அத்துடன் ‘நான் ஈ படம் திரையிடப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்க இயக்குனர் ராஜ மவுலி ஷாங்காய் செல்கிறார். அங்கிருந்து திரும்பியவுடன் ‘பாஹுபாலி பட ஷூட்டிங்கை பிரமாண்ட முறையில் தொடங்க உள்ளார். இதில் அனுஷ்கா, பிரபாஸ், ராணா நடிக்கின்றனர்.

சிங் ஆகும் லால்

‘தசாவதாரம்‘ படத்தில் ஏற்ற 10 வேடங்களில் ஒரு வேடத்தில் சிங் ஆக தோன்றினார் கமல். அதுபோல் ஜோஷி இயக்கிய ‘லோக்பால் மலையாள படத்தில் 8 வேடங்கள் ஏற்ற மோகன்லால் ஒரு தோற்றத்தில் சிங் ஆக தோன்றினார். அடுத்து வி.எம்.வினு இயக்கத்தில் முழு படமும் சிங் கெட்அப்பில் நடிக்கிறார் மோகன்லால். பஞ்சாப், பெங்களூரில் இதன் ஷூட்டிங் நடக்கிறது.

கதைக்கு ஏற்ற ஹீரோ

‘பரதேசி படத்தை அடுத்து இயக்கும் படத்துக்கான கதை தேர்வில் மும்முரமாக இருக்கிறார் பாலா. ‘அவன் இவன் படத்தில் அவருடன் இணைந்த எழுத்தாளர் ராம கிருஷ்ணன் புதிய படத்தில் மீண்டும் இணைகிறார். புதிய ஸ்கிரிப்ட் தயாரிப்பது பற்றி இருவரும் தினமும் பேசி வருகின்றனர். இன்னும் முடிவாகவில்லை. இந்த ஸ்கிரிப்ட்டுக்கு ஏற்ற நடிகரின் கால்ஷீட் கிடைக்காவிட்டால் வேறு ஸ்கிரிப்ட் உருவாக்க திட்டமிட்டுள¢ளார்களாம்.
அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா ‘பட்டத்து யானை‘ மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். விஷால் ஹீரோவாக நடிக்கிறார். ஏற்கனவே விஷால் நடித்த படங்கள் தெலுங்கில் டப்பிங் ஆகி இருக்கிறது. அதுபோல் இப்படம் தெலுங்கில் ‘தீரடு‘ என்ற பெயரில் டப்பிங் ஆகிறது. புதுமுகமாக அறிமுகமாகும் ஐஸ்வர்யாவுக்கு கேமரா பயம் இல்லையாம். ‘ஷூட்டிங் புறப்படுவதற்கு முன் தந்தை அர்ஜுனிடம் டிப்ஸ் கேட்டுக்கொள்வதால் கேமரா பயம் போய்விட்டதாம்.
 
 
இசை ஆல்பம் பேஷன்:
 
இசை ஆல்பம் உருவாக்குவது இசை அமைப்பாளர்களிடமும், நடிகர்களிடமும் அதிகரித்திருக்கிறது. பல்வேறு இசை ஆல்பங்களை உருவாக்கி இருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். தற்போது அவரது சகோதரி ரெஹானா சுற்றுசூழல் பற்றிய விழிப்புணர்வு ஆல்பம் உருவாக்குகிறார். இதற்காக ‘இது நம்ம பூமி என்ற பாடலை பதிவு செய்தார். திப்பு, ஹரிணி, யு.கே.முரளி உள்ளிட்டவர்கள் இவரோடு கைகோர்த்திருக்கின்றனர். நவீன் குமார் ஆல்பத்தை இயக்குகிறார்.

நட்சத்திர குழந்தை நட்ட மரம்

சுற்றுசூழல் விழிப்புணர்வுக்காக பிரபல ஹீரோ, ஹீரோயின்கள் மரம் நட்டனர். அவர்களுடன் 6 மாத குழந்தையொன்றும் மரம் நட்டது. அது நடிகை சுவேதா மேனனின் குழந்தை சபீனாதான். ஆலப்புழையில் நடந்த மரம் நடு விழாவிற்கு கைகுழந்தையோடு வந்த சுவேதா அதன் விரல்களை மரத்தின் மீது வைத்து நட்டுவிட்டார். ‘பிறக்கும்போது என் குழந்தை களிமண் என்ற படத்திற்காக நடித்தாள். இப்போது மரம் நட்டு சாதனை புரிந்தாள்‘ என்று பூரிக்கிறார் சுவேதா.

முருகதாஸின் ‘பிஸ்டல்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘துப்பாக்கி‘ இந்தியில் அக்ஷய் குமார் நடிக்க ‘பிஸ்டல்‘ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதையும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். சோனாக்ஷி சின்ஹா ஹீரோயின். ‘கஜினி‘ ஹிட் கொடுத்த முருகதாஸின் இயக்கம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 2வது வாரத்தில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

‘வாலுக்கு வந்த சிம்பு

லவ் ஆனந்தம் இசை ஆல்பத்தை முடிக்கும் பிஸியில் இருக்கிறார் சிம்பு, இந்நிலையில் ஆல்பத்தின் ஷூட்டிங்கை முடித்துக்கொண்டு ‘வாலு‘ படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்க முடிவு செய்துள்ளாராம். இதன் இறுதிகட்ட ஷூட்டிங்  இம்மாதம் தொடங்குகிறது. ஹன்சிகா ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் சந்தானம், விடிவி கணேஷும் நடிக்கின்றனர். விஜய் சந்தர் இயக்குகிறார்.
காத்திருக்கும் வாரிசு

கார்த்திக் மகன், ராதா மகள்கள் என நடிகர், நடிகைகளின் வாரிசுகள் சினிமாவுக்கு வந்திருக்கும் வேளையில் கோலிவுட்டில் நுழைய காத்திருக்கிறார் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன். 2010&ம் ஆண்டு விஜயகாந்த் நடித்து இயக்கிய ‘விருதகிரி’ படம் திரைக்கு வந்தது. அதன் பிறகு அவரும் நடிப்பதை நிறுத்தி வைத்திருக்கிறார். வாரிசு அறிமுகமாகும் படத்தில் தானும் ரீ என்ட்ரி தரலாம் என காத்திருக்கும் விஜயகாந்த், மகனுக்காக சரியான கதையை தேர்வு செய்வதற்காக ஸ்கிரிப்ட் கேட்டு வருகிறார்.

மீண்டும் பாலிவுட்டில் தனுஷ்

பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல்.ராய் இயக்கும் ‘ராஞ்சனா’ படம் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார் தனுஷ். தமிழில் ‘அம்பிகாபதி’ என்ற பெயரில் வெளியாக உள்ளது. இயக்குனருக்கும், தனுஷுக்கும் ராசி ஒர்க்அவுட் ஆனதையடுத்து புதிய படத்தில் இணைய முடிவு செய்துள்ளனர். இதை டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்திருக்கும் தனுஷ், ‘ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் மீண்டும் நடிப்பது உறுதியாகிவிட்டது. அடுத்த ஆண்டு தமிழ், இந்தி என இருமொழியில் இப்படம் உருவாக உள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.

தெலுங்குக்கு வந்த பரதேசி

பாலாவுக்கு தெலுங்கிலும் மார்க்கெட் உண்டு. அவரது படங்கள் அங்கு டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகிறது. சமீபத்தில் அதர்வா, வேதிகா, தன்ஷிகா நடித்து வெளியான ‘பரதேசி’ படம், தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பாலா இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘சேது’ படம், ‘சேஷு’ என்ற பெயரிலும், ‘பிதாமகன்’, ‘சிவபுத்திருடு’ என்ற பெயரிலும் வெளியாகி உள்ளது.

மும்பையை சுற்றும் பேனர்

மும்பை வெடிகுண்டு வழக்கு தொடர்பாக கைதான சஞ்சய் தத், புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவர் நடித்துள்ள ‘போலீஸ் கிரி’ படம் அடுத்த மாதம் வெளிவர உள்ளது. இதனால் அவர் இல்லாமலே படத்தின் ஆடியோ சிடி வெளியிடப்பட்டது. தற்போது அவரது போட்டோவுடன் கூடிய வினயல் பேனரை வேனில் வைத்து மும்பை முழுவதும் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார் பட இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். அந்த பேனரில், ‘சஞ்சய்தத் விரைவில் சிறையிலிருந்து மீண்டு நடிக்க வர வேண்டும்’ என அவரது ரசிகர்கள் வாசகங்கள் எழுதி கையெழுத்திட்ட வண்ணம் உள்ளனர்.

Comments