ஸ்ருதி நடித்துள்ள படத்துக்கு பிராமணர்கள் சங்கம் எதிர்ப்பு!!!

24th of June 2013
சென்னை::ஸ்ருதி நடித்துள்ள படத்துக்கு பிராமணர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரவி தேஜா, ஸ்ருதிஹாசன், அஞ்சலி நடித்துள்ள தெலுங்கு படம் பலுபு. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. அதற்கு பிராமணர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
இதுபற்றி ஏ. பி. பிராமண சேவா அமைப்பின் இளைஞர் பிரிவு தலைவர் துரோனம்ராஜு ரவிகுமார் கூறும்போது,‘கடந்த ஆண்டு எங்கள் சமூகத்தை சார்ந்தவர்களுக்கு எதிராக ஒரு படம் திரைக்கு வந்தது. அதை எதிர்த்து போராட்டம் நடத்தினோம். அந்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில வெளியான பலுபு பட டிரைலரை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். கடந்த ஆண்டு நாங்கள் நடத்திய நியாயமான போராட்டதை கிண்டல் செய்யும் விதமாக வசனங்கள் வைத்திருக்கின்றனர்.
 
இதற்கு சென்சார் குழுவினர் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் சான்றிதழ் அளித்துள்ளனர். எங்கள் சமூகத்துக்கு எதிராக உள்ள வசனத்தை நீக்க வேண்டும் என்று சென்சார் குழு, பிலிம்சேம்பர் மற்றும் ஆந்திர அரசுக்கு மனு அளித்திருக்கிறோம்‘ என்றார். இதற்கு பதில் அளித்த பட இயக்குனர் மலினேனி கோபிசந்த் கூறும்போது,‘எந்த சமூகத்துக்கும் எதிராக படம் எடுக்கவில்லை. தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னையை சுமுகமாக பேசி தீர்ப்
 
போம். படத்தை சங்கத்தினருக்கு திரையிட்டு காட்ட உள்ளோம்‘ என்றார்.

Comments