சென்னை::பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் - பின்னணிப் பாடகி சைந்தவி திருமணம் நேற்று சென்னையில் நடந்தது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரும் பாடகி சைந்தவியும் காதலித்து வந்தனர். இரு தரப்பு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி இருவருக்கும் நேற்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இன்று காலை இருவருக்கும் சென்னை மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், அரசியல் பிரமுகர்கள் என அனைவரும் வந்திருந்தனர். இன்று மாலை இதே அரங்கில் மணமக்களுக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
Comments
Post a Comment