தனுஷ் நடித்துள்ள மரியான் படம் ரிலீசுக்கு தயார் நிலையில் ஒத்திவைக்கப்பட்டது:அம்பிகாபதி (இந்தி ராஞ்சனா) வெளியீடு!!!

Monday,11th of June 2013
சென்னை::ஆடுகளத்துக்குப்பிறகு தனுஷ் நடித்த படங்கள் தோல்வியடைந்ததால், தற்போது நடித்துள்ள மரியான், அம்பிகாபதி (இந்தி ராஞ்சனா) படங்களைத்தான் ரொம்பவே நம்பிக்கொண்டிருக்கிறார். இதில் அம்பிகாபதி, ராஞ்சனா என்ற பெயரில் இந்தியில் தயாராகியிருந்தாலும், தமிழ் ரசிகர்களையும் மனதில் கொண்டே ஸ்கிரிப்ட் பண்ணியிருக்கிறார்களாம்.
 
அதனால், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்து விடுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக நம்பிக்கொண்டிருக்கிறார் தனுஷ்.
இந்தநிலையில், பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள மரியான் படமும் தற்போது ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது.
 
இப்படத்தின் ஆடியோவை ஏற்கனவே வெளியிட்டுவிட்ட நிலையில், ஜூன் மாதம் படத்தை ரிலீஸ் பண்ணுவதாகத்தான் இருந்தது. ஆனால், தனுஷ் குறுக்கிட்டு, ராஞ்சனாவை ஜூன் 21-ந்தேதி இந்தியில் வெளியிட ஏற்கனவே அறிவித்து விட்டார்கள். அதனால், அதே நாளில் தமிழிலும் அப்படத்தை வெளியிட்டாக வேண்டும் என்று கூறினாராம்.
 
இதையடுத்து நடந்த விவாதத்துக்குப்பிறகு அம்பிகாபதி வெளியாகி ஒரு மாதம் கழித்து மரியானை திரைக்கு கொண்டு வர முடிவெடுத்திருக்கிறார்களாம்.

Comments