கெளதம்மேனனிடம் மகளுக்கு சான்ஸ் கேட்ட ராதா!!!


27th of June 2013
சென்னை::நீதானே என் பொன்வசந்தம் படத்தில் ஜீவா-சமந்தாவை பள்ளி மாணவன்-மாணவியாக காண்பித்த கெளதம்மேனன், அடுத்து சூர்யாவைக்கொண்டு இயக்கும் துருவ நட்சத்திரம் படத்திலும் நாயகியை பள்ளி மாணவி கேரக்டரில் தான் நடிக்க வைக்கிறாராம். அதனால்தான், அந்த வேடத்துக்கு அவர் த்ரிஷாவை ஓ.கே செய்தபோது, 30 வயசை கடந்துவிட்ட நடிகையைப்போயி எப்படி ஸ்கூல் யூனிபார்ம்ல நடிக்க வைக்கிறதாம்? என்று அவரை மடக்கியிருக்கிறார் சூர்யா.அதன்பிறகுதான் அவர் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. கூடவே த்ரிஷாவின் மார்க்கெட் அவுட்டாகியிருக்கிறது. இந்த நேரத்தில் ரிஸ்க் எதற்கு என்று அமலாபால் பக்கம் சாய்ந்திருக்கிறார்.

ஆனால், ஸ்கூல் பெண் வேடம் என்றதை கேள்விப்பட்ட மாஜி நாயகி ராதா, உடனடியாக மும்பையில்இருந்து ப்ளைட் பிடித்து சென்னை வந்து கெளதம்மேனனை சந்தித்திருக்கிறார். எங்கிட்ட ரெண்டு பொண்ணுங்க இருக்கிறது உங்களுக்கே தெரியும். அதுல, கடல் படத்துல நடிச்ச துளசி இப்பத்தான் 10வது முடிச்சிருக்கா. ஸ்கூல் பொண்ணுக்கு கனகச்சிதமா இருப்பா என்று சான்ஸ் கேட்டிருக்கிறார். உங்க பொண்ணு கரைக்ட்டா தான் இருப்பா. ஆனா சூர்யாவுக்கு செட்டாகாது. அதனால் அடுத்த படத்துல பார்க்கலாமே என்று சொல்லி சமாளித்து வழியனுப்பி விட்டாராம்.

இதனால், ஏமாற்றத்துடன் மும்பை திரும்பியபோதும், கெளதம்மேனனின் அடுத்த படத்தில் என் பொண்ணுதான் ஹீரோயின் என்று அடுத்த பப்ளிசிட்டியை கோலிவுட்டில் தொடங்கியுள்ளார் ராதா.

Comments