29th of June 2013
சென்னை::சகுனி, அலெக்ஸ் பாண்டியன் படங்களின் அதிர்ச்சி தோல்வியில் இருந்து மீள வேண்டும் என்பதற்காக, அதையடுத்து பல புதுமுக இயக்குனர்கள் தன்னிடம் கதை சொல்லிவிட்டு தயார் நிலையில் இருந்தபோதும், அவர்களையெல்லாம் ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு, மங்காத்தா இயக்குனர் வெங்கட்பிரபுவிடம் கதை கேட்டு நடித்தார் கார்த்தி. படப்பிடிப்பு நடந்தபோது சின்னச்சின்ன சலசலப்புகள் ஏற்பட்டாலும், ஒருவழியாக படத்தை முடித்து விட்டனர்.
அதையடுத்து, பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களை இயக்கிய ராஜேசிடம் சொன்ன கதை பிடித்தால், உடனடியாக அவருக்கும் கால்சீட் கொடுத்தார் கார்த்தி. இப்படத்தில் கார்த்தியுடன் பிரபு, சரண்யா, காஜல்அகர்வால் என முன்னணி நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். படமும் நன்றாக வந்துள்ளதாம். காமெடி, காதல், சென்டிமென்ட் என கார்த்தி இதுவரை நடித்த படங்களில் புதிய களமாக உள்ளதாம்.அதனால், இந்த படத்தின் மீது அவருக்கு அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாம்.
அதன்காரணமாக, பிரியாணியை பின்தள்ளிவிட்டு, ஆல்இன்ஆல் அழகுராஜாவை முதலில் வெளியிட்டு தன் மீது படிந்துள்ள தோல்வி முத்திரையை அகற்ற நினைக்கிறாராம் கார்த்தி. ஆனால், பிரியாணி இயக்குனர் வெங்கட்பிரபுவோ, அதற்கு மறுக்கிறாராம். என் படம்தான் முதலில் வெளியாக வேண்டும். இன்னும் தாமதம் செய்தால், படத்தை நான் சொதப்பியிருப்பதாக மற்றவர்கள் தப்புக்கணக்கு போட்டு விடுவார்கள். மேலும், பிரியாணியும் பெரிய ஹிட் படம்தான். அதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம் என்று தன் கருத்தை முன் வைத்து வருகிறாராம். இருப்பினும் கார்த்திதரப்பு இன்னும் அதற்கு உடன்படவில்லையாம். ஆனாலும், பிரியாணியை ஆறிப்போவதற்குள் பரிமாறியே ஆக வேண்டும் என்று தனது தரப்பு நியாயத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறாராம் வெங்கட்பிரபு.
Comments
Post a Comment