Wednesday,5th of June 2013
சென்னை::எத்தனை பெரிய ஹிட் படங்களில் நடித்தாலும் ஆரம்ப காலத்தில் நடித்த படத்தைப் பற்றிய கேள்விகளால் ரொம்பவே வருத்தப்படுகிறார் அமலா பால்.
தற்போது தெலுங்கில் இ
வர் நடித்து வெளிவந்த ‘இத்தராமயிலதோ’ படம் ரசிகர்களின் வரவேற்புடன் நன்றாகவே ஓடிக் கொண்டிருக்கிறதாம். குறிப்பாக அமலா பால் நடிப்பிற்கு அமோக வரவேற்பாம்.
முதலில் பிளாஷ்பேக்கில் மட்டுமே அமலா பால் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் ஹீரோ அல்லு அர்ஜுன் தலையிட்டு கிளைமாக்ஸில் அமலா பால் மீண்டும் வருவது போல் காட்சிகளை வைக்கச் சொன்னாராம். இதுதான் ஆந்திர திரையுலகின் ‘ஹாட் டாபிக்’.இருந்தாலும் அமலா பால் எங்கே போனாலும் அவர் தமிழில் நடித்த ‘சிந்து சமவெளி’ படத்தைப் பற்றியே கேட்கிறார்களாம்.
‘சினிமா என்றால் என்னவென்றே தெரியாத காலகட்டத்தில் நடித்த படம் அது. நான் செய்த மிகப் பெரிய தவறே அந்த படத்தில் நடித்ததுதான் என்கிறாராம்.
ம்…அந்த படத்தில் நடிக்க எவ்வளவு முயற்சித்திருப்பார் என்று அந்த இயக்குனரிடம் கேட்டால்தான் தெரியும்.
Comments
Post a Comment