Wednesday,5th of June 2013
சென்னை::ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடிக்கும் ‘கோச்சடையான்’ படத்திற்கு தீபிகா படுகோனே சொந்தக் குரலில் தமிழ் ‘டப்பிங்’ பேசவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால், ஹிந்தியில் அவரே சொந்தக் குரலில் பேசப் போகிறாராம்.
இந்தியத் திரையுலகின் முதல் மோஷன் கேப்சரிங் படமாக தயாராகி வரும் ‘கோச்சடையான்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
தீபிகா தமிழில் பேசவில்லை என்றாலும் அவருக்குப் பொருத்தமான அனுபவம் வாய்ந்த இனிமையான குரலை உடையவர் பேசப் போகிறாராம்.
சௌந்தர்யா அஸ்வின் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருக்கிறார்.
விரைவில் படத்தின் இசை வெளியீடு நடக்கும் எனத் தெரிகிறது.
Comments
Post a Comment