மறுபிறவி எடுக்கும் படங்கள்!!!


24th of June 2013
சென்னை::டப்பிங் படங்கள், ரீமேக் படங்கள், பார்ட் ,2 படங்கள் என சினிமாவில் பல வகை இருக்கிறது. இப்போது ‘மறுபிறவி’ படங்கள் என்ற புதுவகை உருவாகி வளர்ந்து வருகிறது. ஏதாவது ஒரு காரணத்தால் படம் தோல்வி அடைந்தாலோ அல்லது படம் வெளியான காலத்தில் புயல், மழை போன்ற இயற்கை சீற்றங்களால் மக்களிடம் சென்று சேராவிட்டாலோ அந்தப் படத்தின் பெயரை மாற்றி வெளியிடப்படும் படங்கள்தான் மறுபிறவி படங்கள்.

அந்த வகையில் சமீபத்தில் இதுபோன்ற படங்கள் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. அமலாபால் நடித்த ‘சிந்து சமவெளி’படம், மாமனார் மருமகளின் தவறான உறவைப் பற்றியது. கடும் விமர்சனத்தை சந்தித்ததால் சரியாக போகவில்லை. பிறகு ‘சிந்து’ என்ற பெயரில் ‘அமலாபாலின் கவர்ச்சி படம்’ என்று விளம்பரம் செய்து வெளியிட்டார்கள். ‘அந்தரங்கம்’ என்ற கவர்ச்சிப் படம் வெளிவந்தது. அதே படத்தை ‘கமலி’ என்று பெயர் மாற்றி அதன் தயாரிப்பாளர் மீண்டும் வெளியிட்டார்.

‘வெங்காயம்’ என்ற படம் மீடியா மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. தியேட்டர்களில் ஓடவில்லை. இயக்குனர் சேரன் அதை பெரிய அளவில் விளம்பரம் செய்து ‘காயம்’ என்ற பெயரில் வெளியிட்டார். ஓரளவுக்கு அந்தப் படம் ஓடியது. ‘குற்றம் நடந்தது என்ன

‘ஸ்வேதா கேர்ஆப் வெலிங்டன் ரோடு’ என்று ஒரு படம் வெளிவந்தது. கீர்த்தி சாவ்லா கவர்ச்சியாக நடித்திருந்தார். இதே படம் ‘மாயவலை’ என்று மீண்டும் வெளிவந்தது. சோனா நடித்த ‘பத்துக்கு ப
த்து’ படம் சென்னை தவிர மற்ற ஊர்களில் ‘சோனாவின் இரவுகள்’ என்ற பெயரில் மீண்டும் வெளியானது. மார்ச் மாத இறுதியில் வெளியான ‘அழகன் அழகி’ படம், இப்போது, ‘கொஞ்சம் சிரிங்க பாஸ்’ என்ற பெயரில் மீண்டும் வெளியாகியுள்ளது. 2010,ல் வெளியாகி மீடியாவின் பாராட்டைப் பெற்ற ‘தா’ படம், அடுத்த மாதம் ரீ ரிலிஸ் ஆக இருக்கிறது.

இப்படி மறுபிறவி எடுக்கும் படங்கள் புதிய பெயர் சூட்டிக் கொண்டாலும் படம் தணிக்கை செய்யப்படும்போது என்ன பெயர் வைக்கப்பட்டிருந்ததோ அதே பெயர்தான் தொடர வேண்டும். அதனால் புதிய பெயர்களை வைத்தாலும் பழைய பெயர்களை கண்ணுக்கு தெரியாத அளவுக்கு சிறிதாக போட்டுவிடுவார்கள். மறுபிறவி எடுக்கும் போதாவது பெரிய வெற்றியை பெறுகிறதா என்றால் கேள்விக்குறிதான். ‘இப்படி செய்வதை தவறு என்று சொல்ல முடியாது. ஏதோ ஒரு காரணத்துக்காக படம் இடறி விழுந்துவிட்டது என்பதை உணரும்போது அதை தூக்கிவிடும் முயற்சிதான். இதுபோன்ற மறுபிறவி படங்களில் கவர்ச்சிப் படங்கள்தான் அதிக லாபத்தை பெறுகிறது’ என்றார் தயாரிப்பாளர் ஒருவர்.

என்று ஒரு கவர்ச்சிப் படம் வெளிவந்து நல்ல கலெக்ஷனை அள்ளியது. அந்த படம் இன்னொருவர் கைக்கு சென்றதும் அவர் ‘உன்னை சொல்லிக் குற்றமில்லை’ என்ற பெயரில் மீண்டும் வெளியிட்டார்.

Comments