நான் நானாகவே இருப்பேன். சினிமாவுக்காக என்னை மாற்றிக்கொள்ள மாட்டேன்: அஞ்சலி!!!

Monday,11th of June 2013
சென்னை::கற்றது தமிழ் படத்தில் அறிமுகமானபோது அஞ்சலிக்கு சினிமா பற்றி எதுவுமே தெரியாது. ஆனால் அங்காடித்தெரு படத்துக்குப்பிறகு இதுதான் சினிமாவா என்பதை தெரிந்து கொண்டார். என்றபோதும், நான் நானாகவே இருப்பேன். சினிமாவுக்காக என்னை மாற்றிக்கொள்ள மாட்டேன்.

குறிப்பாக நெளிவுசுழிவெல்லாம் எனக்கு ஒத்து வராது என்று சற்று கடுமையாக பேசி வந்தார். இதனால், மேல்தட்டு நடிகர்களின் படங்கள் அஞ்சலிக்கு கிடைக்கவில்லை. அதோடு, அவரது சம்பளமும் கீழ்மட்டத்திலேயே இருந்தது.

இதனால் இப்படியே போனால், எப்போது கார், பங்களா என்று செட்டிலாவது என்று மூளையைக்கசக்கிய அஞ்சலி, திடுதிப்பென்று ஹீரோக்கள் பக்கம் திரும்பினார். எந்த சினிமா விழாக்களுக்கு சென்றாலும், அங்கு வரும் முன்னணி ஹீரோக்கள் அருகில் இடம்பிடித்து நட்பு வளர்த்தார். அதனால் மளமளவென்று மெகா படங்கள் அஞ்சலியின் கைவசம் வந்தது. இந்த நேரத்தில், தனது சித்தியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, தற்போது கோலிவுட்டை காலி பண்ணிவிட்டு ஆந்திராவில் மையம் கொண்டுள்ளார் அஞ்சலி.

அதோடு, அங்குள்ள நடிகைகள் அனைவரும் அதிரடி நடிப்புக்கு சொந்தக்காரர்கள் என்பதோடு, கவர்ச்சியில் கைதேர்ந்தவர்கள் என்பதால், அஞ்சலியும் கட்டவிழ்ந்து நிற்கிறாராம். மேலும், அங்குள்ள முன்னணி ஹீரோக்களுக்கு அதிக அறிமுகமில்லாதவர் என்பதால், தான் நடித்து வரும் படப்பிடிப்பு தளங்களுக்கு அருகில் முன்னணி நடிகர்களின் படப்பிடிப்பு நடந்தால், அங்கு சென்று ஹீரோக்களை சந்தித்து நட்பு வளர்க்கிறாராம். இதன்காரணமாக, அஞ்சலியின் தெலுங்கு சினிமா ரேட்டிங் வேகமாக எகிறத் தொடங்கியுள்ளதாம்.

Comments