சூர்யா வெற்றிக்கு யார் காரணம்!!!

27th of June 2013
சென்னை::இன்றைக்கு சினிமாவில் நான் இந்த அளவிற்கு வெற்றி பெறுவதற்குக் காரணம் எனது மனைவி ஜோ” என்கிறார் சூர்யா.
 
அவரவர் செய்யும் தொழிலுக்கு உற்ற துணையாக மனைவி அமைந்து விட்டால் எல்லா கணவன்களுமே வெற்றிப் பாதையில் சென்று விடுவார்கள்.
இன்று சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருகிறார். இவரின் வளர்ச்சியும், வெற்றியும் அவருடைய போட்டியாளர்களை அதிகமாகவே யோசிக்க வைத்து விட்டது.
 
சூர்யாவிற்கு திருப்புமுனையாக அமைந்த படமான ‘காக்க காக்க’ படத்தில் சூர்யா நடித்ததற்குக் காரணம் ஜோதிகாதான் என்றும் திரையுலகில் ஒரு பேச்சு நிலவியது உண்டு.
 
ஒரு கமர்ஷியல் படம் அடுத்து ஒரு வித்தியாசமான படம் என தனது பாதையை தெளிவாகவே வகுத்துக் கொண்டுள்ளார் சூர்யா. ஆக, சூர்யாவின் வெற்றிக்குப் பின்னால் இருப்பது அவரது மனைவிதான் என்பதை சூர்யாவே சொல்லி விட்டார்.
 
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு சும்மாவா

சொன்னாங்க.

Comments