Saturday,8th of June 2013
சென்னை::இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தின் மூலம் மீண்டும் பெரிய திரைக்கு வந்த 80களின் கனவுக்கன்னி ஸ்ரீதேவி விரைவில் டிவி நிகழ்ச்சி நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், டிவி நிகழ்ச்சி வரப்போவது இங்கல்ல, ஆந்திராவில். ஹிந்தி தொலைக்காட்சியில் அமிதாப்பச்சன் நடத்தி வரும் ‘கோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியின் தெலுங்கு வடிவத்தை நடத்துவதற்காக ஸ்ரீதேவியை அணுகியுள்ளார்களாம். அவரும் சம்மதித்து விட்டதாகத் தகவல்.
இதற்காக அவருக்கு மிகப் பெரிய தொகை வழங்கப்பட இருப்பதாகத் தெரிகிறது.
ஸ்ரீதேவிக்கு எப்போதுமே ஆந்திராவில் மிகப் பெரும் ரசிகர் கூட்டம் உள்ளதால் அதைப் பயன்படுத்தி நிகழ்ச்சியை ஆரம்பித்து மக்களிடையே பேச வைக்க முயற்சிகள் நடக்கிறன்றன.
Comments
Post a Comment