அசத்தலான அழகில் அனுஷ்கா!!!

Saturday,8th of June 2013
சென்னை::ஆந்திரத் திரையுலகில் அழகு என்றால் அதிகம் உச்சரிக்கப்படும் பெயர் அனுஷ்கா.தொடர்ச்சியாக பல வெற்றித் திரைப்படங்களில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருபவர்.
 
நம்மை விட அனுஷ்காவை ரசிப்பதில் ஆந்திர தேசத்தினர் கொ
ஞ்சம் அதிக ஈடுபாட்டுடன்தான் உள்ளனர். சமீபத்தில் ‘சிங்கம் 2’ பிரஸ் மீட்டில் அனுஷ்காவைப் பார்த்தவர்கள் அவர் மீண்டும் பழைய பொலிவுக்கு திரும்பி விட்டார் என்கிறார்கள்.
 
கடந்த சில வருடங்களாக தமிழ்ப் படங்களில் நடித்ததால்தான் அவர் கொஞ்சம் குண்டாகி விட்டார் என்ற அங்குள்ள பத்திரிகைகள் எழுதி வருகின்றன.
தற்போது ‘ராணி ருத்ரம்மாதேவி’, ‘பாகுபலி’ படங்களில் சரித்திர கதாபாத்திரங்களில் நடிப்பதற்காக அனுஷ்கா இழந்த உடல்வாகையும், அழகையும் திரும்பப் பெற்று விட்டார் என பத்திரிகைகள் பாராட்டுகின்றன.
 
இந்த படங்களுக்காக சண்டைப் பயிற்சி, குதிரை ஏற்றம், வாள் வீச்சு போன்ற பயிற்சிகளை அனுஷ்கா பெற்று வருகிறார்.இன்னும் சில வருடங்களுக்கு அனுஷ்காவை தமிழ் சினிமா பக்கம் பார்க்க முடியாது.

Comments