லட்சுமி ராமகிருஷ்ணன் படத்தில் நடிக்கும் மதுபாலா!!!

24th of June 2013
சென்னை::ஆரோகணம் என்ற படத்தை எடுத்து திறமையான இயக்குநர் என்று பெயரெடுத்தவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். இந்த திரைப்படத்தில் விஜி சந்திர சேகர் நடித்திருந்தார்.

பல இயக்குநர்கள், விமர்சகர்கள் பாராட்டிய இந்தப் படம் சமீபத்தில் விஜய் விருது விழாவில் சிறப்பு விருதினை பெற்றது.

சிறிய இடைவெளிக்குப் பின்னர் இரண்டாவது படம் ஒன்றை இயக்க ஆரம்பித்துள்ளார்

இந்தப் படத்தில் ரோஜா, ஜென்டில்மேன் படத்தில் நடித்த நடிகை மதுபாலா நடிக்க உள்ளார்.

திருமணம், குழந்தைகள் என்று செட்டில் ஆகிவிட்ட மதுபாலா, சீரியலில் நடித்தார். இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளார்.

இந்த படத்திற்காக முக்கிய வேலைகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டதாக கூறும் லட்சுமி ராமகிருஷ்ணன், 2014ம் ஆண்டு பிறப்பிற்கு முன்பாகவே தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் நடிகை மதுபாலா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comments