மீண்டும் விசாகாவுடன் சந்தானம்!!!

13th of June 2013
சென்னை::கண்ணா லட்டு தின்ன ஆசையா தந்த வெற்றியின் காரணமாக ஹீரோவும் இல்லாத, காமெடியனும் இல்லாத ஒருவித இரண்டும்கெட்டான் ஹீரோ, காமெடியனாக மீண்டும் நடிக்கப் போகிறார் சந்தானம்.
 
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை ராம.நாராயணனும், சந்தானமும் இணைந்து தயா‌ரித்திருந்தனர். புதிய படத்தை தயா‌ரிப்பது ஹெச்.முரளி. சந்தானம் நடிப்பு மட்டும்தான். லட்டு படத்தில் மூன்று ஹீரோக்கள்(?) ஒரு ஹீரோயின் என்றால், இந்த புதிய படத்தில் இரண்டு ஹீரோக்கள், இரண்டு ஹீரோயின்கள்.
 
காமெடி... காமெடியைத் தவிர வேறில்லை என்ற நோக்கத்தில் தயாராகும் இதில் சந்தானமும், சேதுவும் நடிக்கிறார்கள். சேது கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடித்தவர். அதேபோல் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக கண்ணா லட்டு தின்ன ஆசையா நாயகி விசாகா சிங்கை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
சாய் கோகுல் ராம்நாத் படத்தை இயக்குகிறார்.

Comments