27th of June 2013
சென்னை::சமீபகாலமாக சினிமாவில் தங்களது பெயரளவில் பப்ளிசிட்டி வேண்டும் என்று நினைக்கும் நடிகர்- நடிகைகள் தங்களைப்பற்றிய கிசுகிசுக்களை தாங்களே கொளுத்திப்போட்டு வருகிறார்கள். ஆனால், சிலரைப்பற்றி தானாகவே கசிந்து விடும். தொடர்ந்து ஒரே நடிகருடன் நடித்தால் அந்த நடிகைகளைப்பற்றிய கிசுகிசுக்கள் உடனடியாக புகைந்து எரியும். அப்படித்தான், கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தையடுத்து தேசிங்குராஜாவில் விமலுடன் நடித்து வரும் பிந்துமாதவியைப் பற்றியும் கிசுகிசுக்கள் பரவி வருகிறது.
இதுபற்றி பிந்துமாதவி கூறுகையில், இதற்கு முன்பு களவாணி, கலகலப்பு படங்களில் ஓவியாவுடன் நடித்து வந்ததால் அவரையும், விமலையும் இணைத்து செய்திகள் வந்தன. இப்போது நான் இரண்டு படங்களில் நடித்து விட்டதால் என்னையும் விமலுடன் இணைத்து கிசுகிசுக்கள் வெளியாகியுள்ளன. சினிமாவில் வளர்ந்து வரும நேரத்தில் இதுமாதிரியாக செய்திகள் வருவது சகஜம்தான். என்றாலும், அதை தொடரவிடக்கூடாது.
காரணம், மற்ற ஹீரோக்கள் அந்த கிசுகிசுக்களை உண்மை என்று நம்பி, நம்மை தவிர்க்க வாய்ப்பிருக்கிறது.
அதனால், இப்போது இந்த கிசுகிசுவை ஊதி அணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறேன் என்று சொல்லும் பிந்து மாதவி, விமலுடன் நட்பு ரீதியில் சினிமா விழாக்களுக்கு ஒன்றாக வருவதைக்கூட நிறுத்தி விட்டாராம். சென்னையில் எனக்கென்று கார் வசதி இல்லாத நேரத்தில், சில விழாக்களுக்கு விமலோடு வந்திறங்கியதால் இதுபோன்ற கிசுகிசுக்கள் பற்றிக்கொண்டது. ஆனால், இனிமேல் அப்படி வரப்போவதில்லை. மேலும், தொடர்ந்து விமலுடன் நடிப்பதை தவிர்த்து, மற்ற ஹீரோக்களின் படங்களில் நடிப்பதற்கான முயற்சிகளில் தற்போது ஈடுபட்டிருக்கிறேன் என்கிறார் பிந்து.
Comments
Post a Comment