மீண்டும் தெலுங்கு பாடல் பாடிய சிம்பு!!!

Saturday,8th of June 2013
சென்னை::இயக்கம், நடிப்பு மட்டுமல்லாது பின்னணிப் பாடகராகவும் ஹிட் பாடல்களை கொடுத்து வருபவர் சிம்பு.தமிழில் மட்டுமல்ல, தெலுங்கிலும் அவ்வப்போது பாடல்களை பாடி வருகிறார்.
 
ஏற்கெனவே ஜுனியர் என்டிஆர் நடித்த ‘பாட்ஷா’ படத்திலும் ‘பேக்பெஞ்ச் ஸ்டூடன்ட்’ படத்திலும் பாடியவர் தற்போது ‘பொட்டுகாடு’ என்ற படத்தில் புதிதாக தெலுங்குப் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார்.
 
சிம்புவின் நெருங்கிய நண்பரும், தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகனுமான மஞ்சு மனோஜ் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். சாக்ஷி சௌத்ரி, நதாலியா கௌர், சிம்ரன் கௌர் இந்த படத்தில் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள்.
 
சக்ரி மற்றும் அச்சு இந்த படத்திற்கு இசையமைக்கிறார்கள்.
சிம்பு பாடி கொடுத்ததற்காக ‘நன்றி நண்பா’ என நன்றி தெரிவித்திருக்கிறார் மஞ்சு மனோஜ்.

Comments