23rd of June 2013
சென்னை::இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு ஜெகஜால புஜ பல தெனாலிராமன் படத்திற்கு அரிதாரம்பூசி நடிப்பு அவதாரம் எடுத்தார் வடிவேலு.
சென்னை::இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு ஜெகஜால புஜ பல தெனாலிராமன் படத்திற்கு அரிதாரம்பூசி நடிப்பு அவதாரம் எடுத்தார் வடிவேலு.
இப்படத்திற்காக ஏ.வி.எம்.மில் பிரம்மாண்டமாக செட் போட்டு படப்பிடிப்பினை நடத்தி வந்தனர் படக்குழவினர். காட்சிகளைப் படமாக்குவதில் திட்டமிடல் இல்லாததால் ஏகப்பட்ட குளறுபடிகளாம். முதலில் சகாதேவன் ஒளிப்பதிவு செய்தார். ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த குழப்பத்தால் குட்பை சொல்லிவிட்டு அவர் எஸ்கேப் ஆனார்.
அடுத்து கோபிநாத் அந்த வேலையை பாரமெடுத்தார். ஆனால் அவரும் ஏதோ காரணத்தால் மெதுவாக படத்திலிருந்து விலகிவிட்டார்.
இந்நிலையில் புதிய ஒளிப்பதிவாளராக விஜய் மில்டன் ஒப்ப்ந்தம் செய்யப்பட்டார். அவரும் கடைசியில் கழண்டுகொள்ள, ஒளிப்பதிவாளர் கிடைக்காமல் தவிக்கிறார்களாம் ஜெகஜால புஜ பல தெனாலிராமன்.
இதனால் வட போச்சே... கதையாக படம் போச்சே... என்று அப்செட்டான வடிவேலு, மதுரைக்கு திரும்பிவிடார் என கூறப்படுகிறது.
Comments
Post a Comment