நடிகையர் சம்பளப் பட்டியலில் நயன்தாரா, அனுஷ்கா முதல் இடம்!!!

22nd of June 2013
சென்னை::நயன்தாரா, அனுஷ்கா சம்பளம் ரூ.2 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவரை எந்தவொரு தமிழ், தெலுங்கு நடிகையும் இவ்வளவு தொகை வாங்கியது இல்லை. இருவருக்கும் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. எனவே சம்பளத்தை வரலாறு காணாத அளவு ஏற்றி உள்ளனர்.

நயன்தாரா தெலுங்கில் நடிக்கும் ‘அனாமிகா’ படத்துக்காக இந்த சம்பளம் வழங்கப்படுகிறது. இப்படம் இந்தியில் ஹிட்டான ‘கஹானி’ என்ற படத்தின் ரீமேக் ஆகும். இந்தியில் வித்யாபாலன் கர்ப்பிணி வேடத்தில் நடித்து இருந்தார். அதே கேரக்டரில் நயன்தாரா நடிக்கிறார். கர்ப்பிணியாக நடிப்பதற்காகவே ரூ.2 கோடியை அள்ளி கொடுத்துள்ளனர்.

தமிழில் நயன்தாரா அஜீத் ஜோடியாக பெயரிடப்படாத படமொன்றிலும் ஆர்யாவுடன் ‘ராஜாராணி’ படத்திலும் மற்றும் உதயநிதியுடன் ‘இது கதிர்வேலன் காதலி’ படத்திலும் நடிக்கிறார். இப்படங்களுக்கு இரண்டு கோடிக்கு குறைவாகவே சம்பளம் பேசி உள்ளார். தெலுங்கில் சம்பளம் ரூ.2 கோடியானதால் அடுத்து ஒப்பந்தமாகும் புதுப் படங்களுக்கு ரூ.2 கோடி கேட்க முடிவு செய்துள்ளாராம்.

இதுபோல் அனுஷ்கா ‘ருத்ரமாதேவி’ என்ற சரித்திர படத்தில் நடிக்க ரூ.2 கோடி பெற்றுள்ளார். இதில் அனுஷ்கா மகாராணி வேடத்தில் வருகிறார். இதற்காக வாள் சண்டையும் கற்றார்.

தமிழ், தெலுங்கு ரசிகர்கள் இரு நடிகைகளையும் கனவு கன்னியாக வைத்து கொண்டாடுவதை சம்பள உயர்வு வெளிப்படுத்தி உள்ளது என்கின்றனர்.
tamil matrimony_INNER_468x60.gif

Comments