30th of June 2013
சென்னை::ஏறக்குறைய ஒரே நேரத்தில் அறிமுகமானவர்கள் விமலும், விதார்த்தும். களவாணி, வாகை சூட வா என்று விமலின் பயணம் உயரே போன போது விதார்த்தின் கேரியர் குளறுபடிகள் நிறைந்ததாக இருந்தது. தனி ஹீரோவாக இன்னமும் தடுமாறிக் கொண்டுதான் இருக்கிறார் விதார்த்.
சிவ கார்த்திகேயன் வந்த பிறகு விமலின் நிலைமை விதார்த்தை போல மோசமானது.
கேடி பில்லா கில்லாடி ரங்காவில் இரண்டு பேரும்தான் நடித்தார்கள். விமல் அப்படியே இருக்க, சிவ கார்த்திகேயன் மேலும் மேலும் உயர்ந்து இரண்டு கோடி சம்பளத்தை எட்டியிருக்கிறார்.
விமல் தனது கேரியர் லிஃப்டுக்கு நம்பியிருப்பது எழிலின் தேசிங்குராஜா படத்தைதான். பிந்து மாதவிக்கும் இந்தப் படம்தான் இப்போதைய ஒரே நம்பிக்கை.
காமெடியை மையமாக வைத்துதான் தேசிங்குராஜாவை எழில் இயக்கியிருக்கிறார். விமல் இதில் எம்ஜிஆர் ரசிகராக வருகிறார். அவருடன் பிந்து மாதவியும் தன் பங்குக்கு காமெடி செய்திருக்கிறார். உடன், சூரி. தேசிங்குராஜாவின் பாடல்கள் பரவலான வரவேற்பை பெற்றுள்ளதால் படத்தை வாங்க விநியோகஸ்தர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள்.
Comments
Post a Comment