சென்னை::தமிழில் ஒரே படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடிப்பது என்பது அபூர்வமான விஷயம். எப்போதாவது ஒரு முறைதான் இம்மாதிரி நடக்கும்.
ஆனால், பெரும்பாலான தெலுங்குப் படங்களில் ஒரே படத்தில் இரண்டு முன்னணி ஹீரோயின்கள் நடிப்பார்கள். இருவரையும் ஹீரோ காதலிப்பார், ஆனால் கடைசியில் யாரையாவ
து ஒருவரைத்தான் கல்யாணம் பண்ணிக் கொள்வார். இது ஆண்டாண்டு காலமாக அங்கு நடந்து வரும் ஒரு விஷயம்.
சமீப காலங்களில் தெலுங்கில் வெளிவரும் பல படங்கள் இரண்டு ஹீரோயின் படங்களாகவே வருகின்றன. அந்த வரிசையில் தற்போது தயாராகி வரும் ‘பலுப்பு’ என்ற தெலுங்குப் படத்தில் ஹீரோ ரவி தேஜா ஜோடியாக ஸ்ருதி ஹாசன், அஞ்சலி இருவரும் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் நடைபெற்றது. இரு ஹீரோயின்களுமே கிளாமரான உடையில் விழாவுக்கு வந்து ரசிகர்களைக் கவர்ந்தார்கள்.
ஸ்ருதி ஹாசன் , மேடையில் நடனமாடி ரசிகர்களை இன்னும் அதிகமாகவே கவர்ந்தார்.விரைவில் இந்த படம் வெளியாகிறது. தமிழில் வெளிவரவும் வாய்ப்பிருக்கிறது.
Comments
Post a Comment