தனுஷ் நடித்த இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ்?!!!

Sunday, June 16, 2013
சென்னை::பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் மரியான். இதுவரை தான் நடித்திராத மீனவன் வேடத்தில் நடித்துள்ளார் தனுஷ். அவருக்கு ஜோடியாக பார்வதி நடித்துள்ளார். இப்படத்துக்காக நீச்சலே தெரியாத தனுஷ் ஆழ்கடல் பகுதிக்கு படகை ஓட்டிச்சென்று மீன்பிடிப்பது போல் நடித்திருக்கிறார்.

அதேபோல், தனுஷ் நடித்துள்ள இன்னொரு படம் ராஞ்சனா. காதலை புதிய கோணத்தில் சொல்லியிருக்கும் படம். தனுஷின் முதல் இந்தி படம் என்பதால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. வருகிற 21-ந்தேதி இந்த படத்தைதான் தமிழ், இந்தி என இரண்டு மொழியிலும் வெளியிட திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் இப்போது, அதே நாளில் மரியான் படமும் ரிலீசாவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இரண்டு முன்னணி ஹீரோக்களின் படங்களை ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்தாலே படங்களின் வியாபாரம் பாதிக்கும் என்று நினைக்கிற காலமிது. இந்த நேரத்தில் தனுஷ் நடித்துள்ள மரியான், அம்பிகாபதி ஆகிய இரண்டு படங்களும் ஒரேநாளில் வெளியாகயிருப்பது சினிமா வட்டாரங்களில் பரபரப்பு செய்தியாகியிருக்கிறது.

Comments