காதலனுடன் சுற்றியதை யாரும் கண்டுபிடிக்கவில்லை : லட்சுமிராய்!!!

Wednesday,5th of June 2013
சென்னை::காதலனுடன் சுற்றியதை யாரும் கண்டுபிடிக்கவில்லை என்றார் லட்சுமிராய். தாம் தூம், காஞ்சனா போன்ற படங்களில் நடித்தவர் லட்சுமிராய். அவர் கூறியது: ஆரம்ப கட்டங்களில் எனக்கு பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. அதற்கு பிறகு விளம்பர படம் ஒன்றில் என்னை பார்த்து மறைந்த இயக்குனர் ஜீவா ‘தாம் தூம்‘ படத்தில் வாய்ப்பு தந்தார். அதுதான் திருப்புமுனையாக அமைந்தது. எளிமையான வாழ்க்கைதான் எனக்கு பிடிக்கும். பணம் சம்பாதிப்பது மட்டுமே எனது குறிக்கோள் அல்ல. சம்பாதித்த பணத்தைகொண்டு குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்க வேண்டும்.

நான் காதலிப்பதுபற்றி கேட்கிறார்கள். ஒரு தொழில் அதிபரை காதலிப்பது உண்மைதான். அவருக்கும் சினிமாவுக்கும் சம்பந்தம் கிடையாது. அவர் யார் என்பதை நேரம் வரும்போது சொல்கிறேன். ஆனால் ஏற்கனவே சில முறை அவருடன் நான் பொது நிகழ்ச்சிகளுக்கு வந்திருக்கிறேன். யாராலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. எனது திருமணம் பற்றி என் குடும்பத்திலும் பேசுகிறார்கள். காதலை முழுமையாக அனுபவித்துவிட்டுத்தான் திருமணம். அதுவரை நடிப்பில்தான் கவனம்.

Comments